உலக அழிவு எப்போ?
மாயன் கேலண்டர், நாஸ்ட்ரோ டாமஸ்,பைபிள் என்று எதை எதையோ மேற்கோல் காட்டி 2012 டிசம்பர் 21 ஆம் தேதி உலக அழிவு நிச்சயம் என்று பிரச்சாரம் நடக்கிறது. இதே கருத்தை வலியுறுத்தி ஒரு சினிமாவும் வெளி வந்து சக்கை போடு போடுகிறது. மொத்தத்தில் இதெல்லாம் என்ன ? உண்மையா ? பீலாவா ? என்ற விவாதத்தில் ஒரு ஜோதிடன் என்ற வகையிலும் தென்னிந்திய நாஸ்ட்ரோ டாமஸ் என்ற டைட்டிலுடன் நான் வலையுலகத்துக்கு அறிமுகப்படுத்திய வீரபிரம்மேந்திர ஸ்வாமிகள் பற்றிய தகவல்களை அறிந்தவன் என்ற முறையில் சில வரிகளை இப்பதிவில் எழுதுகிறேன்.
நாஸ்ட்ரோ டாமஸ் தி செஞ்சுரீஸ் எழுதியதைபோல் பிரம்மங்காரு காலஞானம் என்ற நூலை எழுதியுள்ளார். (ஓலை சுவடிகளில்) . நான் அறிந்த வரை அது கிபி1900 முதல் 2008 வரையிலான எதிர்கால குறிப்புகள். அவர் தன் கணிப்புகளை கூறும்போது தமிழ்/தெலுங்கு வருடங்களை கொண்டே குறிப்பிடுகிறார். இவற்றில் உள்ள லொள்ளு என்னவென்றால் 60 ஆண்டுகள் முடிந்த பின் அதே வருடம் ரிப்பீட் ஆகும்
அவர் என்னவோ டீட்டெயில்டாகவே எழுதியுள்ளார் திதி,வாரம், நட்சத்திரம் கூட சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த அமைப்பு 60 வருடங்கள் கழித்து கூட வரலாம். காலஞானத்தின் சாரம் மேற்சொன்ன 1900 முதல் 2008 க்குள் உலகின் ஏழில் ஆறு பாகம் அழிந்து 1 பாகம் மட்டும் மிஞ்சும் என்பதே. ( மூல பாடமான சுவடியை நான் வாசனைகூட பார்த்ததில்லை. இது குறித்த பல புத்தகங்களை படித்துள்ளேன் தட்ஸ் ஆல்)
அவர் அதில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் . அழிவு ஏற்படுவதற்கு முன்பு
1.காஞ்சி காமாட்சி ரத்தம் கக்குவாள்
2. அவள் முலையிலிருந்து பால் வடியும்
3.ஹம்பியில் உள்ள நந்தி சிலை உயிர் பெற்று துள்ளி குதிக்கும்
4.கிருஷ்ணா நதி விஜய வாடா கனகதுர்கா மூக்குத்தியை நனைக்கும்
5.ஒரே நேரத்தில் 7 பிரபல நகரங்கள் சூறையாடப்படும்
அவர் அழிவுக்கு முன்னோடியாக குறிப்பிட்டுள்ள விசயங்கள் இன்னும் நடை பெறவில்லை
அதே நேரத்தில் 2008 உகாதி எப்போதோ முடிந்து விட்டது. எனவே அவரது கணிப்புகளை கடந்த 108 வருடங்களுக்கு பொருத்திப்பார்த்தது தவறாக இருக்கலாம். அதில் உள்ள சம்பவங்கள் 60 வ/120வ/180 வ இப்படி 60ன் மடங்கு வருடங்கள் கழித்து நடக்கலாம். இத்தனை உறுதியாக கூற காரணம் முதற்கண் அவரது கொள்கைகள்
1.பிராமணீயத்தை,பார்ப்பன அகங்காரத்தை கண்டித்தார். தமது தவ வலிமையால் ஒரு அக்கிரகாரத்தையே தீப்பிடித்து எரியச்செய்தார்
2.விக்கிரக வழிபாட்டை கிண்டலடித்தார்
3.ஸ்கேன் வசதியில்லாத அந்த காலத்திலேயே கருவில் குழந்தையின் வளர்ச்சியை படிப்படியாக நேரில் கண்டாற்போல் வருணித்துள்ளார்
4.தீண்டாமையை எதிர்த்தார். கக்கன் என்பவனின் மனைவியை (சக்கிலிய இனப் பெண்ணை சிஷ்யையாக ஏற்றார்)
5. மத வேறுபாட்டை எதிர்த்தார். சித்தய்யா என்ற முஸ்லீமை சீடனாக ஏற்றார். பிரம்மத்தை மிஞ்சின குருவில்லை , சித்தய்யவை மிஞ்சின சிஷ்யனில்லை என்ற புது பொழியை தோற்றுவித்தார்.
அதே சமயத்தில் காலஞானம் நூலில் அவர் குறிப்பிட்டுள்ள பல சம்பவங்கள் 1900 முதல் 2008 இடைப்பட்ட காலத்தில் நடந்தன
1.விதவை அரசாள்வாள் (இந்திரா)
2.தண்ணீரில் விளக்கெரியும் (ஹைட்ரோ பவர்)
3.மனிதர்கள் வானில் பறப்பர் (விமானம்)
4.வர்ணாசிரம தருமம் (கருமம்) அழியும்
5.பார்ப்பனர்கள் செருப்படி படுவர்
இன்னும் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் காலஞானப்படியே நடந்துள்ளன. சரித்திரம் பித்தனை போல் ஒன்றையே உளறுகிறது என்பதற்கேற்ப இந்த சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்க வாய்ப்பிருக்கிறதா ? பிரம்மங்காரு இன்றைய சங்கராச்சாரிகள் போல தண்டதீனி தின்று வலம் வரவில்லை. அவர் தமது குலத்தொழிலை தொடர்ந்து செய்துவந்தார். (செம்பு,பித்தளை வார்ப்பு தொழில்) .வெற்று வேதாந்தங்களை அள்ளி விடவில்லை.இன்றும் அவரது இருப்பை என்னால் உணரமுடிந்தது. முடிகிறது. ஆனால் காலம் என்பது அடர்ந்த,உறைந்த ரகசியம். அதை பிளந்து அறியுமத்தனை ஞானம் நமக்கு கிடையாதுங்கோவ் !
இளமை
முகம்,சரும பகுதிகளில் சுருக்கம் விழுகிறதா? வயதான தோற்றம் தருகிறதா?.கவலையேபடாதீங்க;தினமும் தக்காளி சாப்பிடுங்க,போதும்;இளமை ஊஞ்சலாடும்!
அமெரிக்க நிபுணர் மார்க் பிர்க்மேகின் தலைமையிலான நிபுணர்கள் குழு,இது பற்றி ஆராய்ந்து புதிய உண்மைகளை கண்டுபிடித்துள்ளது.இவர்கள் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பது...
ஆப்பிள் மட்டுமல்ல;தக்காளியும் உடலுக்கு மிக நல்லது.தினமும் எந்த வகையிலாவது உணவில் தக்காளி சேர்த்துக் கொண்டால் போதும்,வயதான தோற்றமே தெரியாமல் இளமை நீடிக்கும்.முகத்தில் சுருக்கம் விழாது;சருமம் பளபளவென இருக்கும்.
தக்காளி சாப்பிட்டு வந்தால்,உடலில் "கொல்லெஜன்" என்ற ப்ரோட்டீன் உற்பத்தி அதிகரிக்கிறது.சருமம் சுருங்காமல் ,வழவழப்புத் தன்மை தருவது இந்த ப்ரோட்டீன் தான்.
நாம் சாப்பிடும் உணவுகளை ஜீரணம் செய்து,அவற்றில் இருந்து சத்துகளை பிரித்து பல உறுப்புகளுக்கும் அனுப்பும் வேலையை செய்வது,"மிடோசோன்ட்ரியா" என்ற செல் பகுதி தான்.வயதான தோற்றம் தெரியாமல் இருக்க இந்த செல் மிகவும் பயன்படுகிறது.தக்காளி சாப்பிட்டால் ,இந்த செல் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதில் முக்கிய பங்காற்றுகிறது,"இக்டோபென்" என்ற,"ஆன்டி-ஆக்சிடன்ட்!" மார்பக புற்றுநோய் உட்பட பல வகை புற்றுநோய்கள் வராமல் தடுப்பதில் இதன் பங்கு அதிகம்.ஆண்களின் மலட்டுத்தன்மையை அறவே போக்குவதும் இதன் வேலை. தினமும் தக்காளி சாப்பிடுவதால் இந்த,"ஆன்டி-ஆக்சிடென்ட்"டும் அதிகரிக்கிறது.தக்காளியை பச்சையாக சாப்பிடுவதை விட சமைத்து சாப்பிடுவதில் தான் அதிக சத்துகள் கிடைக்கும்.மற்ற காய்கறிகள் போல சமைத்த பின் தக்காளியில் சத்துக்கள் குறைவதில்லை;அதனால்,உடலுக்கு முழு சத்துக்கள் கிடைக்கின்றன.
Paypal அகவுண்ட் தொடங்க
இது வரை இந்தியர்கள் Paypal கணக்கு துவங்குவது என்பது மிகவும் கடினமான வேலையாக இருந்தது. உங்களுக்கு Paypal கணக்கு இருக்க உங்களிடம் CreditCard இருக்க வேண்டும் என்பது ஒரு அடிப்படைத் தேவையாக இருந்தது.
இனிமேல் CreditCard தேவையில்லை. இந்தியர்கள் அதிகமாக Paypal பயன்படுத்துவதை உணர்ந்த அந்த நிறுவனம் புதிய கணக்குகளை துவங்குவதை எளிமையாக்கியுள்ளது.
இந்த தொடுப்பை க்லிக் செய்யவும் CLICK HERE
STEP 1: Signup Today எனும் லிங்கை க்லிக் செய்யவும்.
STEP 2: “Business” எனும் மூன்றாவது பிரிவில் உள்ள “Get Started” எனும் buttonஐ க்லிக் செய்யவும்.
Business கணக்கில் தான் உங்களால் பிறரிடம் இருந்து அவர்களின் CreditCard வழியாக வரும் பணத்தைப் பெற முடியும்.
நீங்கள் பிற முறையான “Personal” “Premier” வகையான கணக்குகளையும் ஆரம்பிக்கலாம்.
STEP 3: பின்வரும் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
STEP 4: தங்களின் மின்னஞ்சளுக்கு ஒரு verification link அனுப்பப்படும்.
STEP 5: பிறகு உங்களின் paypal கணக்கில் login செய்யவும்.
STEP 6: இது தான் மிகவும் முக்கியமான படி., Status: Unverified Get verified இதில் “Get Verified” என்பதை க்லிக் செய்யவும்.
Paypal லில் Verified செய்யப்பட்ட கணக்கு இருந்தால் தான் உங்களால் பணத்தை $500 க்கு மேல் பரிவர்த்னை செய்ய இயலும்.
STEP 7: “Add Bank Account” எனும் பகுதியில் சென்று பின்வரும் விவரங்களைக் கொடுக்கவும்.
Account Number:
Account Holder Name: உங்களின் paypal கணக்கில் இருக்கும் பெயரும், வங்கிக் கணக்கில் இருக்கும் பெயரும் ஒரே பெரியராக இருக்க வேண்டும்.
NEFT IFSC Code: இது உங்களின் வங்கி காசோலை புத்தகத்தில் அச்சிடப்பட்டு இருக்கும் அல்லது., இந்தத் தளத்தில் இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிக் கிளைகளின் IFSC எண்கள் உள்ளது.
STEP 8: பிறகு “Add Bank Account” எனும் button ஐ க்லிக் செய்யவும்.
STEP 9: Paypal நிறுவனம் உங்களின் வங்கி கணக்கிற்கு 2 பணப் பரிவர்த்னைகளை நிகழ்த்தும். அந்தப் பரிவர்த்னைகளின் பண மதிப்பு என்ன என்பதை 2-3 நாட்கள் கழித்து உங்களின் வங்கிக் கணக்கில் பார்க்கவும். பொதுவாக அந்தப் பண மதிப்பு 1.47 Rs. போன்று மூன்று இலக்க மதிப்பில் இருக்கும். அந்த மதிப்பை நீங்கள் உங்களின் Paypal கணக்கில் உள்ள “Confirm Bank” எனும் பகுதியில் சென்று கொடுக்கவேண்டும்.
அவ்வளவுதான், நீங்கள் இனி இணையம் வழியாக யாரிடமும் எந்த நாட்டில் இருந்தம் பணத்தைப் பெறலாம். அந்தப் பணத்தை எளிதாக உங்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றலாம்.
தாஜ்மஹா் ரகசியங்கள்
யமுனை நதிக் கரையில் ஷாஜகானே ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தார். ராஜ புத்திர மன்னர் ஜெய்சிங்குக்குச் சொந்தமான தோட்டம்தான் இது. அதைக் கல்லறைக்காக வாங்க விரும்பினார் ஷாஜகான். பண மாகக் கொடுத்தால் நண்பர் தர்மசங்கடப்படுவாரோ என்று எண்ணி, நான்கு அரண்மனைகளைக் கொடுத்து தோட்டத்தைபண்டமாற்று செய்து கொண்டார். உடனே வேலை தொடங்கியது. கட்டடக்கலை-தோட்டக் கலை நிபுணர்கள், சிற்பிகள் உட்பட இரண்டாயிரம் பணியாளர்கள் களத் தில் இறங்கி உழைத்தனர்.
அதற்காக, பாரசீகத்திலிருந்து அமனாத்கான் என்ற கலைஞர் வரவழைக்கப் பட்டு அந்தப் பணி நிறைவேற்றப்பட்டது. அவருக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் அவருடைய கையெழுத் தும் அங்கு செதுக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலில் இடம் பெற்றி ருக்கும் ஒரே கையெழுத்து அவருடையதுதான்!
தொலைவிலிருந்து மட்டுமல்ல… வெளிப்புற வாயிலில் நுழைந்த பிறகு கூட பார்ப்பதற்குச் சிறியதாக இருக்கும். ஆனால்… உள்ளே நுழைந்த பிறகு பார்த்தால், பெரிதாகிக் கொண்டே போய் வியப் பூட்டும். மிக அருகில் போய், அண்ணார்ந்து பார்த்தால் கூரை தெரியாத அளவிற்கு விஸ்வருபமெடுக்கும். அந்த அளவு திட்ட மிடப்பட்டுக் கட்டப்பட்டிருக்கிறது தாஜ்மஹால்.
தாஜ்மஹால் சில அரிய தகவல்கள்!
அதுமட்டுமல்ல! பச்சை வண் ண ஸ்படிகக் கற்கள் மற்றும் நீலம் கலந்த ஊதா நிறக் கற்கள் எகிப்திலிருந்தும், அடுக்கு படிக கொம்புக் கற்கள் (சிவப்பு) ஏமனிலிருந்தும், ஸஃபையர் என்னும்
நீலக்கற்கள் ஸ்ரீலங்காவிலி ருந்தும், பவழம் அரேபியா விலிருந்தும், பச்சை வண் ண கனிமம் ரஷியாவிலிரு ந்தும் தருவிக்கப் பட்டுள்ள ன.
மேலும், ஸ்படிகக் கற்கள் இமயமலையிலிருந்தும், வெள்ளைக் கிளிஞ்சல்கள் மற் றும் முத்து சிப்பிகள் இந்திய பெருங்கடல் பகுதி யிலிருந்தும் கொண்டுவந்து தாஜ்மஹாலை கட்டியிருக்கிறான் ஷாஜகான். ‘இதை கட்டிய கட்டடக் கலைஞர் இவ்வுலகத்தை சேர்ந் தவராக இருக்க முடியாது! இதன் வடி வமைப்பு அந்தக் கலைஞ ருக்கு சொர்க்கத்திலிருந்து கொடுக் கப்பட்டிருக்க வேண்டு ம் எனத் தெரிகிறது!’ என்று தாஜ்மஹா லை கட்டடத்தைப் புகழ்ந்து, ஷாஜகான் கல்வெட்டு ஒன்றில் கூறியிருக்கிறார்.
பெண்கள் விரும்புவது 25 ...
திருமணமான பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?' அப்படிங்கற தலைப்பைப் பார்த்த உடனே, ஆஹா! நமக்குத் தேவையானதாச்சேனு படிச்சேன். படிச்சதும் இதைக் கண்டிப்பா, ப்ளாக்ல எழுதணும்னு தோணுச்சு. 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'..இனி படித்ததிலிருந்து...
"அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் ' பேகோ அண்டர்கில் ' என்பவர், ' திருமணமான பெண்கள் விரும்புவது என்ன? ' என்ற கேள்விக்கு, " பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்புகின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் வெறுப்படைகின்றனர். இதற்கு வெறும் 25 விஷயங்களைச் செய்துவிட்டால் போதும் அவர்கள் உற்சாகமாக இருப்பர் " என்று அந்த 25 விஷயங்களைப் பற்றிக் கூறியுள்ளார். அவை:
1. கொழுப்பு குறைய வேண்டும் : உடலில் சதை போடுவது பெண்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. கொழுப்பு, சதையைக் குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.
2. சமையலைக் கணவர் பாராட்ட வேண்டும் : உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆஹா, ஓஹோ எனப் பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலைக் கற்றுக்கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?
3. ஊமை அல்ல : வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக்கூடாது. சினிமாவில்தான் அப்படிப்பட்ட கதாப்பாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான் வாழ்க்கையில் மனைவியையும் சரிசமமாக நடத்த வேண்டும்.
4. ஆண்மகன் : சிறந்த ஆண்மகனாக, எல்லாராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்கவேண்டும். திறமையை வெளிப்படுத்துபவராக இருக்கவேண்டும்.
5. பொறுப்பு : காலையில் வேலைக்குச் செல்லும்போது, கண்ணாடி எங்கே? சாவி எங்கே? என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக்கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ளவேண்டும்.
6. கட்டுப்பாடு : உணவில் கட்டுப்பாடு வேண்டும். எப்போதும், ஏதாவது நொறுக்குத் தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக்கூடாது.
7. விடுமுறை : விடுமுறை நாட்களில் விரும்பியபடி, ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக்கூடாது.
8. தொந்தரவு : எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் எனத் தொந்தரவு செய்யக்கூடாது.
9. உதவி : சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.
10. பாராட்டு : 'இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது ...' எனப் பாராட்டவேண்டும்.
11. இளமை : நாம் எப்போதும் இளமையாக இருக்கமாட்டோம். அதை நினைவில் கொள்ளவேண்டும்
12. டிரைவிங் : கணவன் கார் ஓட்டும்போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும்போது கணவனோ, பின்சீட்டில் உட்காரக்கூடாது.
13. ஒத்துழைப்பு : குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால், மனைவியைத் திட்டக்கூடாது. குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.
14. நல்ல முடிவு : தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்கவேண்டும்.
15. சம உரிமை : வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை
ஆண்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
16. அவசரம்கூடாது : படுக்கைஅறையில் போர் அடிக்கும் வகையில் கணவன் நடந்து கொள்ளக்கூடாது.
17. ஆச்சர்யம் : வைரமோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண்களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளைக் கொடுத்தாலே போதும்.
18. புது டிரஸ் : ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்கமுடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை
எடுத்துக் கொடுக்கவேண்டும்.
19. குழந்தைகள் : நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்லவேண்டும். குழந்தைகளை அடிமைபோல் நடத்தக்கூடாது. இதில் கணவரின் பங்கு முக்கியம்.
20. பொருத்தம் : நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்கவேண்டும். உள்ளாடை வெளியே தெரியும்படி அவலட்சணமாக இருக்கக்கூடாது.
21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர் : ' ஐயோ... டெலிபோன் பில் அதிகமாகிவிட்டதே! ' எனக் கூச்சல் போடக்கூடாது.
22. சுற்றுலா : அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்லவேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.
23. சுத்தம் : படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும். அதேபோல், ஷெகேசில் உள்ள பொம்மைகள்,பொருட்களையும் சுத்தம் செய்யவேண்டும்.
24. சிக்கல் : பெண்களுக்கு தலைவலி வருவதே, டிரஸுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவவேண்டும்.
25. பொழுதுபோக்கு : சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் ,நண்பர் களுடன் விருந்துக்குச் செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்கவேண்டும். ' வேலை இருக்கிறது, 'டிவி' யை பார்த்துக்கொண்டு தூங்கு! ' என கணவர்கள் சொல்லக்கூடாது.
பெண்கள் விரும்புவது இவ்வளவுதான்; இவற்றை நிறைவேற்றினாலே போதும். அந்தக் குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம்தான்" என்று சொல்லியிருக்கிறார்.
சர்வே பண்ணி,அவர் சொல்லியிருக்கிற, இந்த இருபத்தஞ்சும் செய்ய வேண்டாம்.( அதிகமா ஆசைப் படல!!! ) இதுல இருந்து ஒரு சில விஷயங்கள மட்டும்கூட, இந்த ஹஸ்பண்ட்கள் பண்ணினாப் போதும்; நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம்..அப்படித்தான??
பணத்தை திரும்ப பெற
இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம்.
இப்படி நமக்கு Activate செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர். Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS(Joke, Devotional மற்றும் பல) மற்றும் பல இதில் வரும்.
இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel செய்து விடலாம். இதை அழைக்க கட்டணம் எதுவும் கிடையாது.
தவறுதலாக எடுக்கப்பட்டிருந்து நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு Complaint செய்தால் உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விடும். 24 மணி நேரத்திற்கு பின் நீங்கள் Call செய்தால் சர்வீஸ் மட்டும் கான்சல் செய்யப்படும்.
நீங்களாக Activate செய்த சர்வீஸ்களையும் இதில் Deactivate செய்யலாம். அநேகமாக அனைத்து நிறுவனங்களும் தற்போது இதை கொண்டு வந்துவிட்டன. உங்கள் நெட்வொர்க்குக்கும் இது வந்து விட்டதா என்று அழைத்து பாருங்கள்.
அழைக்க வேண்டிய எண் - 155223- See more at: http://www.karpom.com/2013/02/dial-155223-to-deactivate-vas-activations-and-claim-refund.html#sthash.9IjDwGJA.dpuf
மனிதனுக்கான கம்ப்யூட்டர் வைரஸ்
உலகம் முழுவதும் பரவலாக கம்ப்யூட்டர்களில் வைரஸ் பரவுவதை கேட்டு இருக்கிறோம். ஆனால் அந்த கம்ப்யூட்டர் வைரஸ் மனிதனையும் தாக்கும் அபாயம் உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். மார்க் காஸ்சன் என்ற விஞ்ஞானி ஒருவர் கம்ப்யூட்டர்களை தாக்கும் வைரஸ் மனிதர்களுக்கு வைக்கப்படும் மைக்ரோ-சிப்பையும் பாதிக்குமா என்பதை கண்டறிய முனைந்தார்.
பின்னர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளான அந்த மைக்ரோ சிப் அதை தொடர்புகொள்ளும் கம்ப்யூட்டர்களையும் தாக்குகிறது என்பதையும் நிரூபித்துள்ளார். இன்றைய வாழ்வில் மனிதர்களுக்கு ஹார்ட் பீஸ்மகேர்ஸ் மற்றும் பிரைன் ஸ்டிமுலேசன் யூனிட் போன்ற கருவிகள் இந்த வைரஸால் பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே மனிதர்களுக்கு பயன்படுத்தப்படும் சிப்கள் போதிய பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் மார்க் காஸ்சன் இந்த வைரஸ் அட்டாக் குறித்து மற்று கருத்து தெர்வித்துள்ள சோப்ஹோஸ் என்ற வைரஸ் சாப்ட்வேர் நிறுவனம், உடலுக்குள் வைக்கப்பட்டுள்ள மைக்ரோ சிப்பை படிப்தற்கு ஆர் எப் ஐ டி ரீடர் வேண்டும் மேலும் அது எளிதான காரியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் மார்க் காஸ்சன், தனது ஆரய்ச்சி தொடரும் என்றும், நாம் போதிய எச்சரிக்கையுடன் இதுபோன்ற ஆர் எப் ஐ டி சிப்களை தயாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
20 இணையதளங்கள்
உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது? கண்களை மூடிக் கொண்டு கூகுள் (தேடுதளம்) என்று சொல்லி விடுவீர்கள், இல்லையா? அதுதான் இல்லை. அண்மையில் எடுத்த கணக்கின்படி கூகுள் இணைய தளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படியானால் முதல் இடத்தில்? அதுவும் ஓர் அமெரிக்க தளம் தான். இங்கே இந்த வகையில் அதிக தனிநபர் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள முதல் இருபது இணைய தளங்களை, அதன் வகையுடனும், தன்மையுடனும் காணலாம். இறுதியில் மேலே உள்ள கேள்விக்கான இணைய தளத்தையும் காணலாம்.
20.Amazon.com:
எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், உடைகள், விளையாட்டு சாதனங்கள், ஏன் உணவு கூட இங்கு விற்பனை செய்யப் படுகிறது. இதன் தனி நபர் வாடிக்கையாளர் எண்ணிக்கை 16 கோடியே 30 லட்சம். முதன் முதலில் இது தொடங்கிய போது, பொருட்களைப் பெற்று, பேக் செய்து அனுப்பும் பணியைத்தான் மேற்கொண்டதாக இருந்தது. தற்போது இதன் இமாலய வளர்ச்சி, இணைய வர்த்தகத்தின் சிறப்பினைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
19. Sina.com.cn:
மீடியா மற்றும் பயனாளர்கள் உருவாக்கும் தகவல்களைத் தாங்கித் தரும் சீனநாட்டு இணைய தளம். 2000 ஆம் ஆண்டு வாக்கில், சீனாவின் யாஹு தளம் என்ற பெயரை இது பெற்றிருந்தது. 2009ல் Weibo என்ற பெயரில் வலைமனை தளம் ஒன்றையும் இது தொடங்கியது. இந்த தளத்தில் 40 கோடி பயனாளர்கள் உள்ளனர். சினா டாட் காம் தள சந்தாதாரர் எண்ணிக்கை 16 கோடியே 90 லட்சம்.
18. WordPress.com:
17 கோடியே 9 லட்சம் பேர் பயன்படுத்தும் வலைமனைத்தளம். மிக எளிமையான வலைமனை சாதனங்களை இலவசமாக வழங்கி, தன்
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை இந்த தளம் பெருக்கிக் கொண்டது.
17. Apple.com:
ஆப்பிள் சாதனங்கள் மற்றும் அவற்றிற்கான சாப்ட்வேர் புரோகிராம்களுக்கான தனி தளம். இவற்றைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் சந்தேகங்களைப் போக்குவதற்கான தகவல்களைத் தரும் தளமும் கூட. வாடிக்கையாளர் எண்ணிக்கை 17 கோடியே 17 லட்சம்.
16. Sohu.com :
சீன நாட்டில் இயங்கும் பல்நோக்கு இணைய தளம் மற்றும் தேடல் தளம். 1997 ஆம் ஆண்டில், சீனாவின் முதல் ஆன்லைன் சர்ச் இஞ்சின் தளமாக இது தொடங்கப்பட்டது. தொடர்ந்து ஒரு பல்நோக்கு இணைய தளமாகவும், ரியல் எஸ்டேட் இணைய தளமாகவும் வளர்ந்து, இன்று 17 கோடியே 58 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
15. Bing.com:
மைக்ரோசாப்ட் தன்னுடைய இந்த தளம் குறித்து மிக தீவிரமாக விளம்பரம் செய்தது. மிக எளிதாக தேடலையும் முடிவுகளையும் தரக்கூடிய தளமாக இதனை காட்டி முன்னுக்குக் கொண்டு வர முயன்றது. அதற்கேற்ற வகையில் நவீன தொழில் நுட்பத்தினையும் இணைத்தது. இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 18 கோடியே 40 லட்சம்.
14. Twitter.com:
ரியல் டைம் தொலை தொடர்பினைத் தரும் இணைய தளம். 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நாள் முதல், உலகெங்கும் நடக்கும் நிகழ்வுகளை அறிந்து கொள்ள மக்கள் அணுகும் ஓர் இணைய தளமாக உருவெடுத்துள்ளது. அதற்கேற்ற வகையில், பல நிறுவனங்கள், அரசியல் வாதிகள், மக்கள் தலைவர்கள், ஊடக நிறுவனங்கள், தொழில் முனைவர்கள் ஆகியோர் இதில் தகவல்களைத் தருகின்றனர். இதன் சந்தாதாரர் எண்ணிக்கை 18 கோடியே 98 லட்சம்.
13.Taobao.com:
20 கோடியே 70 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டது. eBay, Amazon போல மிகப் பெரிய வர்த்தக இணைய தளம். இதன் உரிமையாளரான Alibaba.com, இதனை எந்தக் கட்டணமும் இல்லாத தளமாகக் கொண்டு வந்த நாள் முதல், இது தொடர்ந்து பெரிய அளவில் வர்த்தகம் மேற்கொள்ளும் தளமாக உள்ளது.
12. Ask.com:
21 கோடியே 84 லட்சம் பேர் இதன் வாடிக்கையாளர்கள். கூகுள் இதன் பின்னணியில் உள்ளது. இது முதலில் தொடங்கும்போது Askjeeves.com என இருந்தது. பின்னர் மாற்றங்களை அடைந்தது.
11. Blogger.com:
மிகச் சிறிய நிறுவனமாகத் தொடங்கப்பட்ட, இந்நிறுவனம், இணைய தளங்கள் சரிவைச் சந்தித்த போது, தள்ளாடியது. பின்னர், 2002ல், கூகுள் இதனை மேற்கொண்டு தற்போது உயரக் கொண்டு வந்துள்ளது. வலைமனை அமைப்பாளர்கள் அதிகம் நாடும் தளம் இதுதான். 22 கோடியே 99 லட்சம் பேர் இதன் வாடிக்கையாளர்கள்.
10. MSN.com:
மைக்ரோசாப்ட் நிறுவனம் கொண்டுள்ள இணைய வசதிகளில் இதுவும் ஒன்று. இணைய சேவை நிறுவனமாகத் தொடங்கப்பட்டு, ஹாட்மெயில், எம்.எஸ். என். மெசஞ்சர் ஆகியவற்றைக் கொண் டுள்ளது. போர்டல் தளமாக இயங்குகிறது. இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 25 கோடியே 41 லட்சம்.
9. Baidu.com:
வெப்சைட், ஆடியோ பைல்கள், இமேஜஸ் ஆகியவற்றைத் தேடிப் பெற சீனா கொண்டுள்ள இணைய தளம் இது. ஆயிரக்கணக்கான சீனப் பொறியாளர்கள், தொடர்ந்து இதன் தகவல்களை அப்டேட் செய்து வருகின்றனர். இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 26 கோடியே 87 லட்சம்.
8. Micorosoft.com:
கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் அறிந்த தளம். இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 27 கோடியே 17 லட்சம்.
7. QQ,com:
சீனாவில் இயங்கும் தேடல் இணைய தளம் மற்றும் தகவல் களஞ்சிய தளம். இதனை உருவாக்கியது Tancent என்ற சீன நிறுவனம். இன்ஸ்டன்ட் மெசேஜ் சேவையில் இது சீனாவில் முதல் நிலைத் தளமாக உள்ளது. இந்த வகையில் 70 கோடி பேர் தனது வாடிக்கையாளர் என இத்தளம் குறிப்பிட்டுள்ளது. Qzone and the Tencent Weibo blog என இதனுடையை இரண்டு தளங்களும் சீனாவில் புகழ் பெற்றவை. இந்த தளத்தின் வாடிக்கையாளர்கள் 28 கோடியே 41 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
6. Live.com:
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய இமெயில் தளம். அவுட்லுக் மற்றும் ஹாட் மெயில் தளங்களை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டது. இதன் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை 38 கோடியே 95 லட்சம்.
5. Wikipedia.org:
46 கோடியே 96 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டது. இலவசக் கலைக் களஞ்சியமாக இயங்கி வருகிறது. யார் வேண்டுமானாலும், இதில் தகவல்களை ஏற்றலாம். இருப்பவற்றை எடிட் செய்திடலாம். இந்த தளத்திற்கு அதிகம் வருபவர்கள், கூகுள் தளத்தைத் தேடுபவர்களாகவே உள்ளனர்.
4. Yahoo.com:
இணைய பல்நோக்கு தளங்களில் முன்னோடியானது இந்த தளம். தேடல் சாதனமாகவும் இணைய போர்டல் தளமாகவும் செயல்படுகிறது. இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 46 கோடியே 99 லட்சம்.
3. Youtube.com:
பயனாளர்கள் உருவாக்கிய வீடியோ காட்சிகளைப் பகிர்ந்து கொள்ள, பார்த்து ரசிக்க இது ஓர் அருமையான தளமாகப் பல்லாண்டுகள் இயங்கி வருகிறது. 2006ல் இதனை கூகுள் நிறுவனம் தனதாக்கிக் கொண்டு, தொடர்ந்து பல வசதிகளை அளித்து வருகிறது. இதன் தனி நபர் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 72 கோடியே 19 லட்சம்.
2. Google.com:
78 கோடியே 28 லட்சம் பேரைத் தன் வாடிக்கையாளர்களாகக் கொண்ட இந்த தேடுதல் தளம், இவ்வகையில் இன்று உலகின் முதல் இடம் பெற்ற தளமாக உள்ளது. ஜிமெயில், ஜிமேப்ஸ், கூகுள் ப்ளஸ், கூகுள் மெயில் என இணையத்தில் இயங்கும் அனைவரையும் ஏதாவது ஒரு வகையில் இழுத்துப் போட்டு வைத்துக் கொள்கிறது.
1. Facebook.com:
இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கேட்ட கேள்விக்கான பதில் இங்கே உள்ளது. பேஸ்புக் தளம் தான், உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையில் தனிநபர் வாடிக்கையாளர்களைக் கொண்டதாக இயங்கி வருகிறது. இந்த சமூக இணைய தளத்தின் மூலம், உங்கள் நண்பர்கள் அனைவரையும் உடனுடக்குடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். முதன் முதலில் ஹார்வேர்ட் பல்கலைக் கழக மாணவர்களுக்கு மட்டும் எனத் தொடங்கப்பட்ட இந்த சமூக தளம் இன்று உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் நண்பர்களைக் கொண்ட தளமாக இயங்குகிறது.
பழைய சாதத்தின் ?
எங்கள் ஊர் கிராமத்திற்கு விடுமுறைக்குச் செல்லும் போது முந்தின நாள் நீர் ஊற்றி வைத்த பழைய சாதத்திற்கு மறு நாள் காலையில் நீ, நான் என்று போட்டி நடக்கும். அதிலும் பாட்டி, சித்திகள் கையால் பழையசாதத்தை நீர் போகப் பிழிந்து உப்பும் நல்லெண்ணெயும் இட்டு இட்லி மிளகாய்ப்பொடியும் சேர்த்து பிசைந்து கையில் உருண்டைகளாகத் தர அதற்குச் சண்டையே வரும். இந்த முறைக்கு உப்பெண்ணெய்ச்சாதம் என்று பெயர். இன்னொரு முறையில் முந்தின நாள் மீந்த சாம்பார், ரசம், அவியல் அனைத்தையும் ஒன்றாகக் காய்ச்சி பழைய சாதத்துடன் மோர் உப்பு போட்டுக் கலந்து சுண்டக்கஞ்சிக்குழம்பையும் தொட்டுக்கக் கொடுப்பார்களே..சுவைக்கு முன் அமிழ்தம் தோற்று விடும்.குளிர்சாதனப்பெட்டி இல்லை என்ற கவலை இல்லை, பழையது என்ற முகச்சுழிப்பு இல்லை. அந்தப் பழைய சாதத்தைப் பாசத்துடன் பரிமாறும் போது கொள்ளை அன்பு பசியைத் தூண்டி ருசியை அதிகமாக்கும். மதியம் வரை வேறு எதுவுமே உண்ணத் தேவையில்லை, பசிக்கவே பசிக்காது. எந்த நோய் நொடியும் அண்டாது. நாள் முழுக்கப் பழைய சாதம் நம்மைச் சுறுசுறுப்புடன் வைக்கும்.
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். நம் இந்தியர்களின் ஒவ்வொரு விஷயத்தையும் வெளி நாடுகளில் இருப்பவர்கள் ஆராய்ந்து நல்ல விஷயம் என்று முடிவுகளை வெளியிடுகிறார்கள். ஆனால் நம் பெருமையை நாமே அறியாமல் இருப்பதே வருத்தமல்லவா?
பழைய சாதத்தின் மகத்துவங்கள்:
1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
2. பன்றிக் காய்ச்சல்,எந்தக் காய்ச்சலும் அணுகாது4
3. உடற்சோர்வு நீங்கி, உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
4. தணித்து உடலிற்குக் குளிர்ச்சியை உண்டாக்கும்.
5. சிறுகுடலுக்கு நன்மை பயக்கும்.
6. குடல்புண், ஓவ்வாமை, அரிப்பு போன்றவை சரியாகும்.
7. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
8. உடை எடை குறையும்.
9. காலையில் சாப்பிடும் பழைய சாதத்தால் நண்பகல் வரை வேறு எந்த உணவையும் தேடாது.
10. தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

பழையதைச் சாப்பிடுவதையே அநாகரிகமாக நினைக்கும் இன்றைய பிள்ளைகளுக்குப் பழைய சாதத்தின் மகிமை தெரியாதது வருத்தமே..பீட்ஸா, பர்கர், எண்ணெயில் பொறித்த உணவுகள் என்று உடலிற்குத் தீங்கான விஷயங்களுக்குக் காசு கொடுக்கும் பிள்ளைகளுக்குப் பழைய சோற்றின் மகிமையைச் சொல்லி வளர்க்க வேண்டும். பெரியவர்கள் சொன்னது, செய்தது பல உள்ளர்த்தங்களில் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நம் சமையலறை அஞ்சறைப்பெட்டிகளில் வியத்தகு விஷயங்கள் இருக்கின்றன. பாட்டிகளிடம் கேட்டால் தங்கள் அனுபவ அறிவால் எது உடலிற்கு நன்மை பயக்கும் என்பதைப் புட்டு புட்டு வைப்பார்கள்.. மூத்தோர் சொல் அமிழ்தம்.பழைய சாதத்துடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கலந்து உண்டாலும் ருசி அதிகம். கிராமங்களில் வயலோரம் வேலை செய்பவர்களுக்குத் தெம்பு எதிலிருந்து கிடைத்தது என்பதை உணர்ந்து கொள்ளலாம். இன்றைய குழந்தைகள் கண்டதையும் உண்டு சிறு வயதிலேயே உடல் எடையுடனும் மன அழுத்தத்துடனும் அவதிப்படுகின்றனர். எது ஆரோக்கியம்? எது ஆரோக்கியச்சீர்கேடு என்பதைப் பெற்றவர்கள் தான் அறிவுறுத்த வேண்டும். என்ன சாதத்தில் தண்ணீர் ஊற்றப் போயிருக்கிறீர்களா?
வர வேண்டும்
எப்படிப்பட்ட் சினிமா வந்து கொண்டு இருக்கு என்பதை பார்ப்போம்.
1. மதுரை தான் கதைக்களன் – ஹீரோ,வில்லன் அனைவருக்கும் வேலையே யாரையாவது வெட்டுவதுதான்,எப்போதும் கையில் அரிவாளோடு அலையனும்.படம் ஃபுல்லா ரத்தம் தெறிக்கோனும். இடை இடையே ஒரு பாட்டு,ஒரு குத்துப்பாட்டு,ஒரு ரீ மிக்ஸ் பாட்டு.
3. சமீப காலமாக க்ளைமாக்சில் ஹீரோவை சாகடிப்பது தொடர்கிறது. ராவணன், காதல் சொல்ல வந்தேன், பாணா காத்தாடி.. என நீள்கிறது பட்டியல். எதற்கு இந்த போலியான அனுதாப ஒட்டு வரவழைக்கும் போக்கு? கதை அனுமதித்தால் மட்டுமே ஹீரோ சாக வேண்டும். வலுக்கட்டாயமா சாகடிக்ககூடாது.
4. ஹீரோ ஒரு ஊரில் இருப்பார், ஏதோ வேலையாகவோ அல்லது வேலை வெட்டி இல்லாமலோ வேற ஒரு ஊருக்கு போவார், அங்கே ஒரு ரவுடி அல்லது தாதாவின் கொட்டத்தை அடக்குவார். இந்த ஃபார்முலாவில் விஜய், விஷால் உட்பட பலரும் பல படங்களில் நடித்து விட்டார்கள்.
எப்படிப்பட்ட சினிமா வர வேண்டும்?
1. இலக்கியத்துல இருந்து கதை எடுக்கனும்.ஏராளமான நாவல்கள் இருக்கு.அதற்கு திரைக்கதை எழுதி படம் எடுக்கனும்.எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் ,அவர்களிடம் இருந்து கதை வாங்கனும்.அவர்களுடன் அமர்ந்து திரைக்கதை உருவாக்கனும்.
2. நிறைய இயக்குநர்கள் கதை, திரைக்கதை உட்பட அனைத்து பொறுப்புகளையும் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.அதெல்லாம் டி ஆர் கே பாக்கியராஜ் காலத்தோடு சரி.இனிமே ஒவ்வொரு இலாகாவுக்கும் ஒரு ஆள் தனியா செயல்படனும். திரைக்கதை அமைக்க பெரிய டீம் வேணும், அவங்க பேரை டைட்டில்ல போடனும் (அப்போதான் அவங்க ஒழுங்கா ஒர்க் பண்ணூவாங்க)
4. மோகமுள் (தி.ஜானகிராமன்) அதே பெயரில் படமாக்கப்பட்டு விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும் வியாபார ரீதியில் தோல்வி.இதற்குக்காரணம் படத்துக்கு விளம்பரம் இல்லாமையும் ,புதுமுக நடிகர்களை போட்டதும்தான்.இந்த மாதிரி ரிஸ்க் உள்ள கதைக்கு ஃபேமஸ் ஹீரோவே சரி.படம் தயாரிக்க ஆகும் செலவில் 40% விளம்பரத்துக்கும் செலவு செய்ய வேண்டும்.
5. அதே போல் காயத்ரி, ப்ரியா இரண்டும் ரஜினி படங்கள் சுஜாதா கதை. இதில் இரண்டு படங்களும் ஹிட் தான் என்றாலும் சூப்பர்ஹிட் இல்லை. அதற்குக்காரணம் ஒரிஜினல் கதையில் கை வைத்தது. நாவல் ஆசிரியர் என்ன எழுதி இருக்காரோ அதை அப்படியே படம் எடுக்க முடியாதுதான், அதற்காக 75% மாத்தினா இப்படித்தான் ஆகும்.
6. சுஜாதாவின் சூப்பர்ஹிட் நாவலான பிரிவோம் சந்திப்போம் கதையில் வந்த மதுமிதா, ரத்னா கேரக்டர் ஏற்படுத்திய பாதிப்பை தமனாவோ, ருக்மணியோ, டைரக்டரோ ஏற்படுத்த முடியவில்லை. அதனால் படம் வந்த சுவடே தெரியாமல் போனது. அந்தப்படத்தின் இயக்குநர் அந்த நாவலைப்படித்தே பார்த்திருக்க மாட்டார், மேலோட்டமாக கதை கேட்டிருப்பார். நாவலை படித்தால்தான் அந்த உணர்வுகளை உள் வாங்க முடியும். எனவே நாவலைப்படம் எடுக்கு இயக்குநர்கள் முதலில் முழுசாக நாவலைப்படிக்க வேண்டும்.
7. தங்கர் பச்சானின் கல்வெட்டு கதை (அழகி)ஹிட்.மண் சார்ந்த பதிவாக அப்படி எடுக்கனும்.
8. நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் கதை சேரனின் சொல்ல மறந்த கதை யாகி ஜெயித்தது.அது போல் ஈடுபாட்டுடன் மொத்த டீமே உழைக்கனும்.
9. ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்கள் கதை படமாகி ஹிட். சம்பந்தப்பட்டா கதாசிரியரே ஆல் இன் ஆல் வேலை பார்த்தார்.
11. பாக்யராஜின் பவுனு பவுனுதான் தொடராக பாக்யாவில் வந்து பாராட்டை அள்ளினாலும் படம் படுதோல்வி.திரைக்கதை மன்னன் என பெயர் எடுத்தவர் இதில் சறுக்கியது ஏன்?ஹீரோயின் மார்பில் மாமனின் பெயரை பச்சை குத்தியதைப்போல வரும் சீன் ஏற்க இயலாததாக இருந்தது.நாவலில் ஏற்படுத்தாத நெகடிவ் பாதிப்பை சினிமா ஏற்படுத்தியது.
12. அப்புறம் ரெண்டரை மணி நேரம் எடுத்தே ஆகனும்னு ரசிகர்களை கொன்னெடுக்க தேவை இல்லை.சினேகா பிரசன்னா நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு,பிரசாந்த் நடித்த ஷாக், போன்ற படங்கள் ஒன்றரை மணீ நேர படங்களே,வித்தியாசமாக கொடுத்தால் மக்கள் கண்டிப்பாக ஏற்பார்கள்.
ஆண்மை குறைவை போக்கும் ஜாதிக்காய்!
பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயக்கராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருள்:
ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவிகிதம் உள்ளது. அல்பா பைனென், பீட்டர் பைனென், அல்பா-டெர்பைனென், பீட்டா - டெர்பைனென், மிர்ட்டிசின், எலின்சின், செப்ரோல். ஜாதிக்காய் வெண்ணெயில் புட்டிரின் மற்றும் மிர்ஸ்டைன், ஆகிய எண்ணெய் காணப்படுகிறது. ஜாதிபத்ரியிலும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன. இவை ஜாதிக்காயில் காணப்படும் அதே எண்ணெய் வகைகள் என்றாலும் இவற்றில் மிர்ட்டிசின் அதிக அடர்த்தியாக உள்ளது.
முகத்தை அழகாக்கும்:
ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும்; முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது.
அம்மை கொப்புளங்கள் சரியாகும்:
அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.
உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்:
ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
தசைப்பிடிப்பை நீக்கும்:
ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது. ஜீரணத்தை தூண்டவல்லது. தசை வலியினைப் போக்குகிறது. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டுவலி பக்கவாதம் ஆகியவற்றிற்கு பயன்படுகிறது. காலரா நோயின் பொழுது ஏற்படும் தசைப்பிடிப்பு வலியினை போக்க மேல் பூச்சாக உதவுகிறது. இதனுடைய வடிநீர் காலரா நோயாளிகளின் தண்ணீர் தாகத்தினைச் சரிப்படுத்தும். ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.
ஜாதிக்காயின் விதைகளின் மேல் சூழ்ந்துள்ள சிவப்பு நிற திசு ஜாதிபத்ரி எனப்படுகிறது. ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்ரி வயிற்றுப் போக்கு, உப்புசம், குடல்வலி, ஆகியவற்றினை போக்க உதவுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படாமல் இருக்க ஜாதிக்காய் விதையை அரைத்து குடிக்க கொடுப்பார்கள். ஜாதிக்காய், சுக்கு மற்றும் ஓமம் மூன்றின் பொடி ஜீரணத்திற்கு சிறந்த மருந்தாகும்.
எண்ணற்ற வியாதிகளுக்கு மருந்தாகும் முருங்கை!
பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது. அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.
முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.
சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.
இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.
முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.
முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.
முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.
முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.
முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.
இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.
மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.
முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.
கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்சளி, சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருங்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும். ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது.
முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருங்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிருத்தி செய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சள்காமாலை, குடலில் ஏற்படும் திருகுவலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும். விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு, மூட்டுவலிகளில் பயன்படுத்தலாம். முருங்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்துப் பருகிவர காசநோய், கீழ்வாயு, முதுகுவலி குணப்படும்.
வைட்டமின்கள் :
முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது.
ஈரபதம் - 75.9%
புரதம் - 6.7%
கொழுப்பு - 1.7%
தாதுக்கள் - 2.3%
இழைப்பண்டம் - 0.9%
கார்போஹைட்ரேட்கள் - 12.5%
கார்போஹைட்ரேட்கள் - 12.5%
தாதுக்கள், வைட்டமின்கள்,
கால்சியம் - 440 மி.கி
பாஸ்பரஸ் - 70 மி.கி
அயம் - 7 மி.கி
வைட்டமின் சி 220 மி.கி
வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்
ஆடைக்கும் பாடம் உண்டு
நலவாழ்வும் உடையும்:
உடலுக்கு அழகைத் தருவதுடன் நல்வாழ்வுக்கு அரணாகவும் விளங்குவது உடை. ‘உணவு, உடை, உறையுள்’ எனும் அடிப்படைத் தேவைகளுள் நடுநாயகமாக இருக்கும் ‘உடை’ உடலுக்கு அழகையும் தந்து, தட்பவெப்ப நிலைகளாலும், புற அழுக்குகளாலும் உடல் தரக்குரவு பெறாமல் பாதுகாக்கும் இரட்டைப் பயனைத் தருகின்றது. புறத் தூய்மைகள் என இன்றைய அறிவியல் மருத்துவர்கள் குறிப்பிடுவனவற்றுள் உடைத் தூய்மையும் ஒன்றாகும். ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ எனும் மூதுரை, உடைத் தூய்மையை வலியுறுத்தும். அழகுணுர்ச்சியும், நலவாழ்வு நோக்கும் இணைந்ததன் இனிய சின்னம் ‘உடை’, தசைகளின் போர்வையாக அமைந் துள்ள தோலின் பாதுகாப்பிற்கும், அதன் மூலம், உள்ளுறுப்புகளின் சிதைவைத் தடுப்பதற்கும் பேருதவி புரியும் உடையின் முதல் நோக்கம், நலவாழ்வு நோக்கமாக அமைதல் இன்றியைமையாததாகும். பருத்தி, பட்டு போன்ற இயற்கைப் பொருள்களிலிருந்து உருவாக்கப் படும் ஆடைகள் நலவாழ்வு நல்கும் திறனுடையன.
இன்றைய தமிழர் வாழ்வில் இடம் பெற்றுள்ள பல்வேறு வகையான ஆடைகள், அழகுணர்வை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அமைவதால், தோல் தொடர்பான பல்வேறு நோய்கள் ஏற்படுவதுடன் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களும் வர வாய்ப்புள்ளதை மருத்துவ ஆய்வாளர்கள் குறிப்பிடுவர். பழந்தமிழர் வாழ்வில் நிலவிய ‘உடை’ வகைகளைச் சங்க இலக்கியம் வழி ஆராய்ந்தால், அவை, நலம் நல்கும் நன் நோக்கத்தினையும், அழகுணர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டிருந்ததை அறியலாம்.
தழையுடைகள்:
சங்ககாலத்தில் மகளிர் தழையுடை, மரவுரி ஆகிய இயற்கை ஆடை அலங்காரங்களையும் பருத்தியாலும் பட்டாலும் நெய்யப்பட்ட உடைகளையும் அணிந்திருந்தனர். குறமகள் மாமரக் கொத்துக்களை நடுவே வைத்து இலைகளையுடைய நறிய பூங்கொத்துகளைச் சுற்றிலும் வைத்துத் தொடுத்த பெரிய அழகிய தழைகளையுடைய ஆடையை உடுத்தினர். மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அழகுணர்ச்சியைக் கொண்ட இத்தகைய தழையுடைகளை இன்றும் கிழக்கு ஆசிய நாடுகளான, பிஜித் தீவு, அவாய், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் வாழும் மகளிர் உடுத்துவது ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கதாகும்.
துகில், கலிங்கம்:
செல்வந்தர்களும், அரசர்களும், ‘துகில்’ எனப்படும் ஆடை வகையினை அணிந்திருந்தனர். இன்ப துன்பங்களை உணர்த்தும் வகையிலும் அக்கால ஆடை வகைகள் அமைந்திருந்தன. கணவனைப் பிரிந்த காலத்து மனைவியர் மாசேறிய நூலால் தைக்கப்பெற்ற கலிங்கத்தை உடுத்திப் பிரிவுத் துன்பத்தை உணர்த்தினர். கணவனோடு உறையும் காலத்து பூ வேலைப்பாடுகளுடன் கூடிய ‘துகிலை’ உடுத்தி மகிழ்ச்சியைப் புலப்படுத்தினர்.
பல்வகை ஆடைகள்:
பாம்பின் தோலைப் போன்ற ‘அறுவை’ எனும் ஆடை வகையையும், பட்டாடையையும், தன்னைப் பாடி வந்த பொருநர்க்குக் கரிகாலன் வழங்கினான். மூங்கில் பட்டையை உரித்தாற் போன்ற அழுக்கற்ற ‘அறுவை’ எனும் நீண்ட அங்கியை நல்லியக் கோடன் பாணர்க்கு நல்கினான். பாலாவி போன்ற தூய்மையும் மென்மையும் வாய்ந்த ‘கலிங்கம்’ எனும் உடையைத் தொண்டைமான் பாணர்க்கு அளித்தான்.
காலத்திற்கேற்ப உடை:
காவிரிப்பூம்பட்டினத்துச் செல்வ மகளிர் பகற்காலத்தில் பட்டு ஆடைகளை உடுத்தினர். இராக் காலத்தில் மென்மையான துகிலை அணிந்தனர். அரசமாதேவியர் மார்பில் ‘வம்பு’ எனும் கச்சினை வலித்துக் கட்டினர்.
வீரர் உடை:
இரவு நேரக் காவலர்கள் இரவில் நீல நிறக் கச்சையை அணிந்தனர். தொண்டை நாட்டுக் காவலர்கள் ‘படம்’ எனும் சட்டையை அணிந்திருந்தினர். அழுக்கேறிய கந்தலாடையை ‘சிதாஅர்’ என்றனர்.
கடவுளர் உடை:
திருமுருகாற்றுப்படையில், முருகனைப் போற்றும் நக்கீரர், முருகன் ‘நலம்பெறு கலிங்கம்’ எனும் ஆடையை அணிந்திருந்ததாகக் குறிப்பிடுகின்றார். இதனால் அக்காலத்தே ‘நலம் நல்கும் நன்நோக்கிற்கே ஆடை அணியப்பட்டது’ எனும் கருத்தினைப் பெறலாம்.
முனிவர் உடை:
திருவாவினன் குடியில் முருகனை வழிபட்ட முனிவர் மரப்பட்டை கொண்டு செய்யப்பட்ட உடையை உடுத்திருந்தனர். இசைவாணர்கள், அழுக்கேற்ற தூய உடையினை அணிந்திருந்தனர்.
அர்ச்சகர் உடை:
ஆகம வழிபாடுகளை நெறியுடன் கடைப்பிடிக்கும் ஆலய அர்ச்சகர்கள், ‘புலராக் காழகம்’ உடுத்தி, இறைவனை வழிபட்டனர். காழகம் என்பது அரையில் கட்டப்பெறும் ஆடை. இதனை நீராடியபின் நனைத்து உடுத்தனர்.
அரசர் உடை:
அரசன் கஞ்சியிட்டுச் சலவை செய்யப்பட்ட துகிலை அணிந்திருந்தான். பேகன் தான் குளிருக்காகப் போர்த்தியிருந்த ‘கலிங்கம்’ எனும் மெல்லிய போர்வையை மயிலுக்குப் போர்த்தி மகிழ்ந்தான்.
துகில், அறுவை, கலிங்கம் போன்ற உயர்ந்த மெல்லிய பூ வேலைப்பாடுடன் கூடிய ஆடை வகைகளைச் செல்வந்தர்களும் அரசரும் அணிந்தனர்.

பழந்தமிழில் ஜாதி உண்டா?
பழமையான தமிழ் எழுத்துகள் 'பிராமி’ என்று குறிக்கப்படுகின்றன. தமிழ் பிராமியைப் பழமையான தமிழ் எனும் பொருளில் 'தமிழி’ என்று அறிஞர்கள் குறிப்பிடுவதும் நோக்கற்குரியது.
'தமிழ் பிராமி கல்வெட்டுகள் காட்டும் தமிழகச் சமூகப் பொருளாதார நிலை’ எனும் கட்டுரையில், தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை சிறப்பு ஆணையர் திரு. தி. ஸ்ரீ. ஸ்ரீதர் அவர்கள், பழந் தமிழரிடையே தொழிலை அடிப்படையாகக் கொண்ட பெயர்கள்தாம் இருந்தனவே தவிர சாதியை அடிப்படையாகக் கொண்ட பெயர்கள் இல்லை என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். சாதி, இன ஏற்றத்தாழ்வுக் கொள்கை என்பது இந்தியப் பண்பாட்டோடு பின்னிப்பிணைந்தது என்றும் இக்கொள்கை இந்தியரின் மிகப் பழமையான கொள்கை என்றும் கூறப்படும் கருத்துகள் தவறானவை.
கி.பி. 7 ஆம் நூற்றாண்டிற்குப் பின் ஆரியவர்த்தத்தில் ஆரியரால் உருவாக்கப்பட்ட கொள்கையே சாதி, இன ஏற்றத்தாழ்வுக் கொள்கை. இக்கொள்கை இந்தியாவிற்கு வந்த அந்நியர் உருவாக்கிய கொள்கை. இக் கொள்கை இந்தியரின் கொள்கை அன்று, இந்தியப் பண்பாட்டோடு பின்னிப் பிணைந்த பழமையான கொள்கையும் அன்று.
இக்காலத்தில் ஒரே குடும்பத்தில் பொறியாளர், ஆசிரியர், மருத்துவர் எனப் பல தொழில்களைப் புரிபவர்களும் இருப்பதைப் போன்று சங்க காலத்தில் இருந்துள்ளனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் வழி அறிகின்றோம். உலகம் முழுவதும் தொழில் வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், சாதி வேறுபாடு இந்தியாவில் மட்டுமே இருக்கின்றது. சாதி, தொழில் அடிப்படையில் வந்தது என்பது தவறான கருத்தாகும். சாதிக்கும் தொழிலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தியாவில் 'இழிதொழில்’ ஆதிக்கவாதிகளால் சமூகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ளது. யாராவது 'மலம் அள்ளும் தொழிலை’ விரும்பி ஏற்பார்களா? யாருமே விரும்பி ஏற்கமாட்டார்கள்தானே. ஆனால், இந்த 'இழிதொழில்’ இந்தியாவில் அடக்குமுறை சார்ந்ததாக உள்ளது.
சாதியை அடிப்படையாகக் கொண்ட பெயர்கள் காணப்படாமல் தொழிலை அடிப்படையாகக் கொண்ட பெயர்களே பழந் தமிழரிடையே இருந்தன என்பதை அறிந்து கொள்ளத் துணை புரிகின்றது இக்கட்டுரை. ஆழ்ந்து நோக்குவோம்.
- தெ. தேவகலா
'தமிழ் பிராமி கல்வெட்டுகள் காட்டும் தமிழகச் சமூகப் பொருளாதார நிலை’
- தி. ஸ்ரீ. ஸ்ரீதர்
தமிழ் பிராமி கல்வெட்டுகள் மூலமாக அக்காலச் சமூகம், பொருளியல் வாழ்வைப் பற்றி அறியக் கிடைக்கும் செய்திகள் குறைவே. பொன்னையும் பொருளையும் வெறுத்து, துறவு வாழ்வை மேற்கொண்ட துறவியரையும் அவர்களது இருப்பிடங்களையும் அவற்றை உருவாக்கிக் கொடுத்த கொடையாளர்களையும் பற்றியே இவை கூறுகின்றன. எனினும் இக்குகைத்தளங்களைக் கல்தச்சர்களைக் கொண்டு பொருள் செலவுசெய்து உருவாக்கிய கொடையாளிகள் மற்றும் அவர்கள் அளித்த கொடைகள் மூலம் சமூகப் பொருளாதாரச் செய்திகளை நம்மால் ஊகிக்கமுடியும்.
குடிகள்:
நால்வருணப் பாகுபாட்டை தமிழ்-பிராமி கல்வெட்டுகள் குறிப்பிடவில்லை. பல்வேறு தொழில் செய்த குடியினர் பெயர்களே அறக்கொடையாளராகக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. சங்ககாலச் சமூகம் தொழில் அடிப்படையில் பிரிந்த குடிநிறை சமூகமாகவே இருந்துள்ளது என்பதை இலக்கியங்களும் காட்டுகின்றன. தமிழ் – பிராமி கல்வெட்டுகளில் கீழ்க்காணும் குடியினர் பற்றித் தெரியவருகிறது.
இளையர்:
சித்தன்னவாசல் கல்வெட்டில் முனவர்களது குகைத்தளத்தை உருவாக்கிய அறக்கொடையாளராக இளையர் என்ற குடியினர் குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் படைத் தொழிலை மேற்கொண்ட குடியினராகச் சங்ககாலத்தில் திகழ்ந்துள்ளனர். முத்துப்பட்டி கல்வெட்டில் குறிப்பிடப்படும் எளமகன் (இளமகன்) இக்குடியினரைச் சார்ந்தவனாகவே இருக்க வேண்டும். செங்கம் நடுகல் கல்வெட்டுகளில் போர்த் தொழில் செய்த படைவீரர்கள் இளமகன் என்றே குறிப்பிடப்படுகின்றனர். எனவே இளமகன் அல்லது இளமக்கள் என்பவர்கள் அரசனிடத்திலோ அல்லது சிறுகுடித்தலைவர்களிடத்திலோ பணிபுரிந்த படைத்தொழில் புரியும் குடியினராக இருக்க வேண்டும் எனலாம்.
ஈழக் குடும்பிகன்:
திருப்பரங்குன்றம் கல்வெட்டில் ஈழக்குடும்பிகன் போலாலயன் என்பவன் குறிப்பிடப்படுகின்றான். இவன் எருகாட்டூரில்இருந்த ஈழநாட்டைச் (இலங்கை) சார்ந்த குடியினராக இருக்க வேண்டும் என்று சிலர் கருதுகின்றனர். சங்க இலக்கியப் புலவர்களில் ஒருவராக ஈழத்துப் பூதன்தேவனார் விளங்கியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது...
மலைய்வண்ணக்கன் - மணிய்வண்ணக்கன்:
அரச்சலூர் கல்வெட்டில் வரும் அறக்கொடையாளர் பெயரை இருவிதமாகப் படித்துள்ளனர். மலைய்வண்ணக்கன் என்று இதனைப் படித்த மகாதேவன் மலைசார்ந்த குடியினைச் சார்ந்தவன் என்று இவனைக் கருதுகின்றார்.2 கொங்கு நாட்டில் கொங்கு வேளாளரில் வண்ணக்கர் கோத்திரம் என்ற பிரிவு இன்றும் வழங்கப்படுகிறது. வண்ணக்கன் என்பதற்கு மேலும் ஒரு பொருள் சொல்லப்படுகிறது. வர்ணகா என்பதற்கு பாடல் வல்ல இசையாசிரியன் என்று பொருள் கூறி இவன் அரச்சலூர் இசைக்கல்வெட்டை உருவாக்கியவன் என்று கருதுகின்றனர். மணிய் வண்ணக்கன் என்று இக்கல்வெட்டைப் படிப்பவர்கள் மணிகளைப் பரிசோதிக்கும் தொழிலை மேற்கொண்டவன் இவன் என்று கருதுகின்றனர்.
சங்கப் புலவர்களில் வண்ணக்கன் என்ற பெயரைப் பெற்ற புதுக்கயத்து வண்ணக்கன் சம்பூர்கிழான், வடம வண்ணக்கன் தாமோதரன்,வண்ணக்கன் கோமருங்குமரனார் என்ற புலவர்கள் இருந்துள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்கது.
வேள்:
வேள் என்று பெயர் பெற்ற குடியினர் சங்க காலத்தில் புகழுடன் வாழ்ந்துள்ளனர். கடையேழு வள்ளல்களில் சிலர் இவ்வேளிர் குடியினரைச் சார்ந்தவர்கள் ஆவார்கள். மேட்டுப்பட்டி கல்வெட்டில் குவிரஅந்தை வேள் அதன் (வேளாதன்) என்பவன் குறிப்பிடப்படுகின்றான்.
கொல்லர், தச்சர்:
பொன் செய் கொல்லன், பாறையை உடைத்துக் கட்டடங்களை உருவாக்கும் தச்சர் பெயர்கள் அழகர்மலை, மாமண்டூர் தமிழ் – பிராமி கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன.
வணிகர்:
வணிகர்கள் பெருமளவு சமண சமயத்திற்கு ஆதரவு அளித்திருக்கின்றனர். அழகர்மலை, மாங்குளம், புகளூர் முதலிய இடங்களிலுள்ள கல்வெட்டுகள் இதற்குச் சிறந்த சான்றுகளாக உள்ளன. பாண்டியரின் தலைநகரான மதுரை வணிகத்தில் சிறந்து விளங்கிய நகரமாக இருந்துள்ளதை மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்கள் மூலம் அறியமுடிகிறது. பல்வேறு வணிகம் செய்த வணிகரின் கடைத்தெருக்கள் மதுரையில் இருந்துள்ளன. பல நாடுகளைச் சார்ந்த வணிகர் இதில் தங்கியிருந்து வணிகம் செய்துள்ளனர். மதுரையில் இருந்து பல பொருட்களைக் கொண்டு வணிகம் செய்த வணிகர்கள் சேர்ந்து அழகர்மலைப் பள்ளியை உருவாக்கியுள்ளனர். அவர்களது பெயர்கள் பின்வருமாறு கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றது.
1. மதிரை பொன்கொல்வன் அதன்அதன்
2. உபு வாணிகன் வியகன் (உப்பு வணிகன்)
3. பாணித வாணிகன் நெடுமலன்
4. கொழு வாணிகன் எளசந்தன்
5. வெண்பள்ளி அறுவை வணிகன் எளஅ அடன்
இவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக அமைந்த நீண்ட இரு கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றனர். தொடக்கத்தில் குறிக்கப்படும் மதிரையை (மதுரை) இவர்கள் அனைவருக்கும் உரிய ஊர் என்று கொள்ளலாம். மதுரையைச் சார்ந்த பொன்வணிகன் இங்கு குறிப்பிடப்படுகின்றான். ஆனால் இவன் பெயர் குறிப்பிடப்படவில்லை. சங்க காலத்தில் உப்பு வணிகம் குறிப்பிடத்தக்க அளவில் நடைபெற்றிருக்கிறது. நெல்லும் உப்பும் ஓரே விலையாகச் சங்ககாலத்தில் இருந்துள்ளன. நெல்லை வாங்கிக் கொண்டு உப்பை அதே அளவு பண்டமாற்றாகக் கொடுத்துள்ளனர். (அகம் 140, 340). இதனால் உப்பு வணிகர் வணிகர்களில் உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்தனர். அழகர்மலைக் கல்வெட்டில் வியகன் என்ற உப்புவணிகன் குறிப்பிடப்படுகின்றான்.
பாணிதவாணிகன் நெடுமலன் என்பவன் அழகர்மலைக் கல்வெட்டில் அறக்கொடையாளராக இடம் பெற்றுள்ளான். பணிதம் என்றால் சர்க்கரை என்று பொருள் கூறி இவன் சர்க்கரை வியாபாரியாக இருக்க வேண்டும் என்று ஐராவதம் மகாதேவன் கருதுகின்றார். பளிதம் என்ற சொல்லே கல்வெட்டில் பாணித என்று குறிப்பிடப்படுகிறது. பளிதம் என்றால் பச்சைக்கற்பூரம் என்று பொருள். சங்க காலத்தில் அதனை அடைகாயோடு (பாக்கு) சேர்த்து அருந்தினர். எனவே, பாணித வணிகன் என்பவன் பச்சைக்கற்பூர வியாபாரியாக இருக்க வேண்டும் என்று மயிலை. சீனி. வேங்கடசாமி கருதுகின்றார்.3 கொழு வணிகன் கலப்பை வியாபாரம் செய்யும் வணிகன் என்று ஐ.மகாதேவன் கருதுகின்றார்.4 இரா. நாகசாமி இவன் இரும்பு வியாபாரியாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்.5 சங்க காலத்தில் துணியை வியாபாரம் செய்த வணிகர்கள் அறுவை வணிகர் என்றழைக்கப்பட்டனர். வெண்பள்ளி என்ற ஊரைச் சார்ந்த இளஆட்டன் (எளஅஅடன்) அழகர்மலைக் கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றான். மதுரையில் அறுவை வாணிகம் செய்த சங்கப்புலவர் ஒருவர் இருந்துள்ளார். இவர் இளவேட்டனார் என்றழைக்கப்பட்டுள்ளார். சங்கப் பாடல்கள் சிலவற்றைப் பாடியுள்ள மதுரையைச் சார்ந்த புலவர்கள் சிலர் வணிகர்களாக இருந்தமை இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. அவர்கள் மதுரைக் கொல்லன் புல்லன், மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார், மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார், மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராய்த்தனார், மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் ஆகியோராவர்.
சங்ககாலத்தில் சேரரின் தலைநகராக விளங்கிய கருவூரும் வணிகச் சிறப்பு பெற்ற நகரமாகத் திகழ்ந்துள்ளது. கருவூருக்கு அருகில் அமைந்த புகளூர்ச் சமணப் பள்ளிக் கல்வெட்டில், கருவூர் பொன்வணிகன் நந்தி என்பவன் குறிப்பிடப்படுகின்றான். இவனும் சமண முனிவர்களுக்குப் படுக்கை அமைத்துக் கொடுத்துள்ளான். புகளூர் கல்வெட்டில் எண்ணைவணிகன் வெநிஆதன் (வெண்ணி ஆதன்) என்பவன் குறிப்பிடப்படுகின்றான்.
நிகமம்:
வெள்ளறை என்ற ஊர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டளவில் வணிகத் தளமாக விளங்கியதை மாங்குளம் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. இவ்வூர் நிகமத்தினைச் சர்ந்தவர்கள் மாங்குளம் மலையில் முனிவர்களது உறைவிடங்களை அமைத்துக் கொடுத்துள்ளனர். நிகமம் என்றால் வணிகர்குழு அல்லது வணிகருக்குரிய கடைத்தெரு என்று பொருள். நிகமம் என்பதே சங்க இலக்கியத்தில் நியமம் என்று குறிப்பிடப்படுகிறது. சங்க காலத்தில் பல முக்கிய நகரங்களைச் சார்ந்து நியமங்கள் இருந்திருக்கின்றன.
மாங்குளம் கல்வெட்டு குறிப்பிடும் வெள்ளறை மாங்குளம் மலைக்கு அருகில் அமைந்த ஊராகும். தற்போது இது வெள்ளரிப்பட்டி என்ற பெயரில் வழங்குகிறது. கல்வெட்டில் குறிப்பிடப்படும் இவ்வூரில் இருந்த நிகமத்தில் பல வணிகர்கள்சேர்ந்து குழுவாக வாழ்ந்துள்ளனர். மதுரைக்கு அருகில் அமைந்த இவ்வூரில் பாண்டியரின் தலைநகரில் வணிகம் செய்ய ஏதுவாக நிகமம் ஒன்று இங்கு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இது பெருவழியில் பயணம் செய்த வணிகர்கள் தங்கவும் பொள்களை வைத்துப் பாதுகாக்கவும் விற்பனை செய்யவும் பயன்பட்டிருக்க வேண்டும். காவிதி என்ற பட்டம் பெற்ற வணிகர்கள்வெள்ளறை நிகமத்தில் இருந்துள்ளதை மாங்குளம் கல்வெட்டு தெரிவிக்கிறது.
தொழில்கள்:
பொன்னைக் கொண்டு ஆபரணங்கள் செய்தல். கடலிருந்து உப்பை எடுத்தல், கரும்பிலிருந்து சர்க்கரை எடுத்தல், ஆடை நெய்தல், இரும்பை உருக்கி கலப்பை போன்ற பொருட்கள் செய்தல் எள்ளிலிருந்து எண்ணெய் எடுத்தல் முதலிய தொழில்கள் சிறப்பாகநடைபெற்றுள்ளதை அழகர்மலை, புகளூர் கல்வெட்டுகள் மூலம் உய்த்தறிய முடிகிறது. கல்லை உடைத்து கட்டடங்களை உருவாக்குதல் சங்க காலத்திலேயே தொடங்கி விட்டது என்பதற்குத் தமிழ்பிராமி கல்வெட்டுக் குகைத்தளங்களே சிறந்த சான்றுகளாகும். மாமண்டூர் கல்வெட்டில் அக்குகைத்தளத்தினை உருவாக்கிய தச்சன் பெயர் குறிப்பிடப்படுகிறது. மலையைக் குடைந்து குகைத்தளத்தினை உருவாக்கும் தொழிலை 'குயித்தல்’ (குடைத்தல்) என்று கொங்கர்புளியங்குளம் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
செலாவணி (காசுகள்):
கொங்கர்புளியங்குளம், அழகர்மலை கல்வெட்டுகளில் குகைத்தளங்களை உருவாக்கியவர்களின் பெயர்கள் உள்ள கல்வெட்டுகளில் அவர்கள் பெயருக்குப் பின்னர் குறியீடுகள் காணப்படுகின்றன. இவை குகைத்தளத்தினை உருவாக்கச் செலவுசெய்த பொன்னைக் குறிக்கும் குறியீடுகள் என்று மயிலை. சீனி. வேங்கடசாமி கருதுகின்றார். இக்குறியீடுகள் முத்திரை குத்திய காசுகளில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. கொங்கர் புளியங்குளம் கல்வெட்டில் காசினைக் குறிக்க வரும் வெபோன் என்ற சொல் சங்ககாலத்தில் காசுகள் வழக்கத்தில் இருந்ததைக் காட்டுகிறது. 'வெண்பொன்’ என்பதே கல்வெட்டில் 'வெபோன்’ என்று குறிப்பிடப்படுகிறது. இக்காசு தமிழ்-பிராமி கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட காலத்தில் இந்தியநாடெங்கும் புழக்கத்தில் இருந்த முத்திரை குத்தப்பட்ட வெள்ளி நாணயமாக இருக்க வேண்டும்.
வேளாண்மை:
விக்கிரமங்கலம் கல்வெட்டில் வரும் பேர்அயம் என்ற சொல் ஏரியைக் குறிப்பதாக மகாதேவன்கருதுகின்றார்.6 வரிச்சியூர் கல்வெட்டு நூறு கலம் நெல் பற்றித் தெரிவிப்பதாகக் கூறுகின்றார்.7 இவை தமிழ் - பிராமி கல்வெட்டுகளின் காலத்தில் வேளாண் நீர் பாசன வசதிகள், வேளாண் விளைச்சல், அவற்றின் விளைச்சல் மிகுதி, பகிர்மானம் ஆகியவற்றை உணர்த்துகின்றன.
தமிழ் -பிராமி கல்வெட்டுகளின் காலத்தில் இருந்த சமுதாயப் பொருளாதார நிலை வருமாறு:
1. வேள் நிலையிலிருந்து வேந்தர் நிலைக்குமாறியதாகவும் வேள் மற்றும் குடிநிலை எச்சங்களை உடையதாகவும் விளங்கியது.
2. வேளாண்மை வளர்ச்சிக்கு உறுதுணையான பாசன வசதிகளில் கவனம் செலுத்தப்பட்டதால் ஏரி பராமரிப்புகள் (பேரயம்) நெல், கரும்பு, எள், பருத்தி முதலிய பயிர் உற்பத்திகள்; கரும்பிலிருந்து சர்க்கரை (பாணித), எள்ளிலிருந்து எண்ணெய், பஞ்சிலிருந்து துணி (அறுவை), உழவிற்கு உபகரணமான கொழு (கலப்பை) உற்பத்தி என வேளாண்சார் ஆலைத் தொழில்கள் இவை தொடர்பான வணிகம் ஆகிய குறிப்புகள் தமிழ் - பிராமி கல்வெட்டுகளில் காணப்படுகின்றன எனலாம்.
3. பொன், வெள்ளி, மணிக்கற்கள், பற்றிய குறிப்புகள் தமிழ் – பிராமி கல்வெட்டுகளில் காணப்படுவதும், முத்திரை குத்திய காசுகளின் குறியீடுகள் காணப்படுவதும் அக்கால செலாவணிகளின் தன்மையையும் சமூகத்தின் போகத்துய்ப்பு நிலையையும் காட்டுகின்றன.
4. முசிறி, தொண்டி முதலிய பண்டைத் துறைமுகங்களின் பெயர்கள் கடல் கடந்த பன்னாட்டு வணிகத்தை உணர்த்துகின்றன.
5. அழகர்மலையில் ஐந்து வகை வணிகர்களும் புகளூரில் இருவகை வணிகர்களும், மாங்குளத்தில் வணிகநிகமமும் தமிழ்-பிராமி கல்வெட்டுகளில் குறிக்கப்படுவதிலிருந்துபல்வகை வணிகர்களும் ஓரிடத்தில் கூடும் நடைமுறை இருந்ததையும் அவர்கள் கட்டுக் கோப்புடன் குழுக்கள் அமைத்துக் கொண்டதையும் அறிய முடிகிறது.
6. ஆட்பெயர்களில் நிறைய பிராகிருதப் பெயர்கள் உள்ளதும் சாதவாகனர் காசில் தமிழ்-பிராமி உள்ளதும் தமிழ் நாட்டுடனான தக்கண, வட இந்திய வணிகத்தைக் காட்டுவனவாகும்.
7. பானை ஓடுகளில் கீரல்களாக உள்ள தமிழ்-பிராமி சொற்கள் கடல் கடந்து இந்தோ - ரோமானிய வணிகத்தையும், உரைக்கல்லில் காணப்படும் தமிழ்-பிராமி பொறிப்பு கிழக்காசிய வணிகத்தையும் தமிழகம் பெற்றிருந்தது எனத் தெளிவாகக் காட்டுகின்றன.
அடிக்குறிப்புகள்:
1. I Mahadevan, Early Tamil Epigraphy,p. 584
2. மேலது, பக். 616-617.
3. மயிலை. சீனி. வேங்கடசாமி, சங்ககாலத்துப் பிராமி கல்வெட்டுகள், கழக வெளியீடு, சென்னை, 1981, பக். 57.
4. I Mahadevan,. Ibid, p. 573,
5. கல்வெட்டியல், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 1980, பக்.52
6. I Mahadevan,. Ibid, p. 568-569,
7. மேலது பக். 558
(கட்டுரை: http://vadakovaiouraan.blogspot.in ல் இதழில் வெளியானது)

குளியல்
நீராடல் :
உடல் தூய்மைக்கு உதவும் இன்றியமையாத நற்பழக்கம் ‘நீராடல்’. ‘கூழானாலும் குளித்துக் குடி’ எனும் மூதுரை நீராடலின் இன்றியமையாமையை வலியுறுத்தும். அதிலும் ஆறு, கடல் அருவிகளில் நீராடல் என்பது இயற்கையோடு ஒன்றிய நீராடல் எனலாம். மேனாடுகளில் வெப்பக் குளியல் (Sun Bath). ஆவிக்குளியல் (Steam Bath), மூலிகைக் குளியல் (Herbal Bath) என்று பல்வேறு வகைக் குளியல்கள் நலவாழ்வு நோக்கில் உருவானவை. எண்ணெய் நீராடல், அருவி நீராடல், கடல் நீராடல் ஆகியவை இரத்த ஓட்டத்திற்குப் பெரிதும் உதவுகின்றன என்னும் உண்மையை அறிவியலார் இன்று உணர்ந்து வருகின்றனர். இந்த நற்பழக்கம் பழந்தமிழர் வாழ்வில் இயல்பாகவே இணைந்திருப்பதைப் பின்வரும் சங்க இலக்கியச் சான்றுகள் புலப்படுத்தும்.
நதி நீராடல்:
வைகை நதியில் புதுப்புனல் ஆடிய மகளிர் கூந்தலுக்கு அகில் புகையூட்டி ஈரம் புலர்த்தினர். பல்வகைப் பொருட்களைக் கொண்டு நீராடிய மகளிர் உடலில் வீசிய மணம் நாற்காத தூரம் வீசியதாம் ‘எருமண்’ கொண்டு கூந்தலின் அழுக்கைப் போக்கினர். நதி நீராடல் பற்றிய பல்வகைக் குறிப்புகளைப் பரிபாடல் அழகுற விளக்குகின்றது.
எண்ணெய் நீராடல்:
எண்ணெய் நீராடல் சங்க காலம் முதலே நிலவி வருவதை நற்றிணைச் செய்தி உறுதிப்படுத்தும். மகப்பேறுற்ற மகளிர் வெண்கடுகை அப்பி எண்ணெய் தேய்த்து நீராடுவர் என்பதை நற்றிணை குறிப்பிடுகின்றது. அக்கால மகளிர் நிறைய எண்ணெயினைத் தலையில் பெய்து, குளிர்ந்த மணமுள்ள சந்தனத்தைப் பூசி முழுகுவர். பின் ஈரம் புலர, வயிரம் பாய்ந்த அகிலின் புகையை ஊட்டி, விரலால் குழலை அளைந்து சிக்கு விடுவித்தனர். வேறு சில மகளிர் எண்ணெய் முழுக்கின்போது அரப்புப் பொடியிட்டுத் தேய்த்துக் குளிப்பர். பல்வேறு மணப்பொருட்களை நீராடும்போது பயன்படுத்தினர். இதுவே பிற்காலத்து ‘வாசனைத் தைலங்கள்’ சேர்ந்த ‘தைல முழுக்கிற்குத்’ தூண்டுதலாக அமைந்தது.
கடல் நீராடல்:
கடல் நீராடல் என்பது ஒரு விளையாட்டாகவே அக்காலத்தில் நிலவியது. கடல் நீராடும் பரதவ மகளிர் பனை நுங்கின் நீரையும், கருப்பஞ்சாற்றையும் கலந்து பருகிக் கடலில் பாய்ந்து நீராடுவாராம். விளையாட்டுக் காலங்களில் உடல் சோர்வடையாமல் இருக்க இக்காலத்தும் விளையாட்டு வீரர்கள் தேன் குளுகோஸ் அருந்துவதைக் காணலாம். இப்பழக்கத்தினை நினைவூட்டுவது போல் அக்காலப் பரதவ மகளிர் கடல் நீராடல் நிகழ்ச்சி அமைந்துள்ளது.
காதல் நோய் தீர கான்யாறு நீராடல்:
மரம் செடி கொடிகள் நிரம்பிய காட்டின்கண் மழை பெய்தமையால் பெருகிவரும் கான்யாற்று நீரில் குளித்தால் அது பல்வேறு மருந்துச் செடிகளின் சேர்க்கை உடையதாதலால் அது பிணி போக்கும் தன்மை உடையது என்பதை அக்கால மக்கள் நம்பினர். தலைமகன் ஒருவன் தலைவியைப் பிரிந்து செல்ல அதன் காரணமாகத் தலைவி வாடி நடுக்கமுற்றிருந்தாள். இதனைக் கண்ட நற்றாய் தோழியிடம் “ஆகாயத்தில் மிக உயர்ந்த பெரிய மலைப் பக்கத்தில் மிக்க இடியோசையுடைய மேகம் பெய்யத் தொடங்கி நள்ளிரவில் மிக்க மழை பொழிந்ததினாலே கற்கள் நிரம்பிய காட்டின்கண் ஓடும்யாற்றிலே மரங்கள் காய்ந்த சருகுகளோடு கழித்தனவாகிய முகிழ்ந்த பூங்கொத்துக்களையும் அடித்துக் கொண்டு வருகின்ற புதிய இனிய நீரானது இவளுக்குற்ற நோயைத் தீர்க்கும் அருமருந்தாகும். அதனைக் குளிர்ச்சி பெறப் பருகி அங்குள்ள காட்சிகளைக் கண்ணால் நோக்கி ஆடப்பெற்றால் இவள் மெய்யின் நடுக்கம் தீரும்” என்கிறாள்.
இதிலிருந்து பலவகை நோய்க்குக் குறிப்பாக, ‘மெய்யின் நடுக்கம்’ போன்றவற்றுக்குக் ‘கான்யாற்று நீராடல்’, அக்காலத்து அருமருந்தாக அமைந்திருந்ததை அறியலாம். இன்றும் நரம்புத் தொடர்பான நோய்களுக்குக் குற்றாலம் போன்ற கான்யாற்று அருவிகளில் குளிக்கும் பழக்கம் அருமருந்தாகக் கருதப்படுவது ஈண்டு ஒப்பு குறிப்பிடும் “நீராடும் மருத்துவ நெறி”க்கு ஏற்ப அமையும் சங்க காலக் ‘கான்யாற்று நீராடல்’ பழக்கம் அரிய மருத்துவப் பயனுடையது.
கூந்தலின் மணப் பொருட்களைப் பூசுதல்:
பழந்தமிழ் மகளிர் கூந்தலைப் போற்றிய திறம் பெரிதும் வியப்புக்குரியதாகும். ‘கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா? என்பது பற்றிய அரிய விவாதம் இலக்கியத்தில் உண்டு. மகளிர் கூந்தல் மணம் செயற்கையே என்பது சங்கப் பாடல்கள் தரும் கருத்தாகும். சங்க இலக்கியப் பாடல்கள் பல கூந்தல் பாதுகாப்புப் பற்றிய பல குறிப்புகளைத் தருகின்றன. இடைப்பெண்டிர், பாலையும் வெண்ணையையும் தலையில் தடவிக் கொண்டனர். அகிலின் நெய்யைக் கலந்து பல காலம் தலைக்குத் தேய்த்து வந்தால் முடி கருமை நிறம் கொண்டதாக விளங்கும். எண்ணெய் தடவி வருவதால் நீண்ட முடி, சுருள் முடியாக மாறும். விறலியரின் கூந்தல் பாதிரி மணம் கமழும். மகளிர் மங்கள நீராடிய பின் புகையூட்டி உலர்த்தி, மயிர்ச் சந்தனம் பூசி மணம் கமழும் கூந்தலுடன் விளங்கிய காட்சியை அகநானூறு விளக்கும்.
கூந்தலுக்கென மதுரை நகர மகளிர் பயன்படுத்திய மணப்பொருட்களைப் பரிபாடல் குறிப்பிடுகின்றது. வையை நதியில் நீராடிய மகளிர் குங்குமச் சேறு, அகிற் சாந்து, பச்சைக் கற்பூரம் ஆகியவற்றைச் சாத்தம்மியிலிட்டுத் தீ நிறம் பெற அரைத்துக் கூந்தலுக்குப் பூசி நீராடினர். நீல நிறக் கூந்தலில் பத்து வகையான துவர்களைத் தேய்த்து நீராடினர். நீராடிய பின் வெட்டி வேராலும், விலாமிச்சை வேராலும் தொடுத்த பன்மலர் இலையை அணிவர். ‘நாறிருங் கூந்தல்’, அம்மென் கூந்தல்’, ‘அறல் போற் கூந்தல்’ எனப் பலவகையாகக் கூந்தலைப் போற்றும் புலவர்களின் உட்கருத்து, அக்கால மகளிர் கூந்தலைப் பாதுகாத்த முறைகளை எதிரொலிப்பதாகும்.
விளையாட்டுகள்:
கட்டுடல், திண்தோள் போன்ற உடல் அழகைக் குறிக்கும் சொற்கள் சத்துணவால் மட்டும் அமைவதில்லை. உடம்பின் சதை, எலும்பு போன்றவற்றை ஒழுங்குபடுத்தி அழகூட்டும் விளையாட்டுகளாலும் அமைகின்றன. விளையாட்டுகள் என்பவை பொழுது போக்கிற்காக மட்டுமல்ல; உடல் பயிற்சிக்காகவும். ஏற்படுத்தப்பட்டவை ஆகும். பழந்தமிழர் வாழ்வில் விளையாட்டு என்பது அன்றாட வாழ்வோடு பிணைந்து விட்ட பழக்கமாக விளங்கி வந்துள்ளது. மகளிரும், ஆடவரும் அவரவர் உடல் அமைப்புக்கேற்றவாறு விளையாட்டுக்களை மேற்கொண்டு பொழுதை இனிமையாகக் கழித்ததுடன் உடம்பையும் ஒழுங்கு முறையாக வளர்த்துக் கொண்டனர்.
மகளிர் விளையாட்டு:
‘ஓர் ஆயம்’ எனப்படும் விளையாட்டைச் சிறுமியர் ஆடினர். பூந்தாதுக்களைக் கொண்டு பாளை செய்து ஆடுதலே ‘ஓர் ஆயம்’ எனப்பட்டது. நெய்தல் நில மகளிர் உப்பங்கழிக்கு அருகில் மலர்களைப் பறித்து விளையாடினர். கடல் அலையின்கண் நீராடி மகிழ்ந்தனர். பனை நாரினாலே திரித்த கயிற்றை மரக்கிளையில் பிணித்துத் தொங்கிவிட்டு ஊஞ்சலில் ஆடினர். கைப்பந்தும் கால்பந்தும் ஆடினர். வரிப்பந்து ஆடினர். நூலால் வரிந்து பனையப்பட்ட பந்தை எறிந்தும் அடித்தும் விளையாடினர். குறிஞ்சி நில மகளிர் சுனையில் நீராடினர். மலை அருவிகளில் விளையாடினர்.
ஆடவர் விளையாட்டு:
பாலை நிலச் சிறுவர் நெல்லிக்காய்களை வட்டாகக் கொண்டு பாண்டி ஆடினர். தேர் உருட்டி விளையாடினர். செல்வச் சிறுவர் பெரிய மணிகள் பதித்த சிறிய தேரில் இருக்க, சேடியர் அத்தேரை இழுத்துச் சென்றனர். ஏழைச் சிறுவர் பனங்குரும்பையை கொடியாற்கட்டி இழுத்து விளையாடினர். மதுரை மாநகரில் ஞாயிறு மறைந்த பின்பு முதல் சாமத்தில் வீரர் சிலர் போர்ப் பயிற்சி கொண்ட யானையைத் தம்மைத் தொடர்ந்து வந்து பிடிக்கும் படி ஏவி அது தொடர்ந்த போது, அதன் போக்கைத் தடுக்கத் தம் மடியிலிருந்த கப்பணங்களைத் தரையில் சிதறி விட்டனர். பரதவர் முழுமதி நாளில் மகளிருடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

இந்து மதம் என்றால்
நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகிறதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள்.
வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பயமுறுத்தியது பூமி.
இமயமலைக் குளிர் காற்றில் நடுங்கியபடி ஓடிக் கொண்டிருக்கிறது சிந்து நதி. என்ன திமிர்? அத்தனை குளிரிலும் மானசரோவரில் பிறந்த சுமார் ஆயிரம் மைல்கள் மலையிலேயே நடை பயின்று பிறகுதான் கீழிறங்குகிறாள் சிந்து.
அது அந்தக்கால ஆப்கானிஸ்தான் நிர்வாண மனிதர்கள். சாப்பிடத் தெரியாது. எதுவும் தெரியாது. மாலை மயங்கி இருள் இழைய ஆரம்பித்தால் பயத்தில் சிகரத்தில் ஏறி குகைகளுக்குள் விழுந்து விடுவார்கள். சூரியன் மறுநாள் வந்து விளக்கேற்றிய பிறகுதான் பயம் போய் வெளியே வருவார்கள்.
பூமியே புதிராக தெரிந்தது. அவர்களுக்கு நதியை யார் துரத்துவது? பயந்தனர். மரத்தின் தலையைப் பிடித்து உலுக்குவது யார்? பயந்தனர் சுற்றிலும் இருள் பூசியது யார்? நடுங்கினர்.இந்தப் பயத்தாங்கொள்ளிகளுக்கிடையே சிலபேர் பயப்படாமல் பார்த்தார்கள். மலை, நதி, மரம், வானம், உற்றுப் பார்த்தார்கள்.
அவர்களின் மூளைக்குள்ளும் சூரியன் உதித்தது. மனிதனுக்கே உரிய சிந்தனா சக்தி அந்த சிலருக்கு வயப்பட்டது. சிந்தனையை இரு கண்களிலும் ஏற்றி வைத்துக் கொண்டு பார்வையால் உலகத்தைக் குடைந்தனர்.
விளைவு...! கண்டுபிடிக்கப்பட்டது தெய்வம். இதுவரைப் பார்த்து பயந்த மரம், செடி, கொடி, மலை நதி தான் தெய்வம். இருட்டை ஓடஓட விரட்டுகிறானே அந்த வெளிச்சம்தான் தெய்வம் என்றான் உற்றுப் பார்த்தவன். (இந்த தெய்வம் என்ற பதம்தான் அய்ரோப்பியர்களால் டிவைன் (Divine) என வழங்கப்படுகிறது.
ஆரியர்களில் ஒரு பகுதிதான் அய்ரோப்பாவுக்கு நகர்ந்தது).இயற்கைதான் கடவுள். துரத்தும், உலுக்கும் சக்தி தான் கடவுள். உற்றுப் பார்த்தவன், பார்த்தான் பார்த்தான் பார்த்துக் கொண்டே இருந்தான்.அவனுக்கு ரிஷி என பெயர். ரிஷி என்றால் பார்ப்பான், பார்ப்பான், பார்த்துக்கொண்டே இருப்பான்.
நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என கண்டுபிடித்தவர்கள் அடுத்ததாய் அதற்குநாம் கட்டுப்பட்டு வாழ்வதெப்படி என்பதையும் வகுத்தார்கள்
உண்டாயிற்று வேதம்.
உற்றுப் பார்த்து சிந்தித்து சிந்தனையாளர்களால் நாகரிகம் மெல்ல மெல்ல அரும்பத் தொடங்கியது.‘இந்த உலகமே தெய்வம்தான். நாம் வாழ சந்தோஷமாக வாழத்தான் தெய்வத்தைப் பயன்படுத்த வேண்டும்” -வகுத்தது வேதம்.“Civilisation never born, but, it is the heritage of humanity” என பிற்பாடு அமெரிக்க அறிஞர் ப்ரைஸ் சொன்னது போல் தொட்டுத் தொடர்ந்தது நாகரிகம்.
முதலில் இயற்கையைப் பார்த்துப் பயந்த மனிதர்களுக்கு சிந்தனை செய்து உற்றுப் பார்த்த மனிதனான ரிஷி அறிவுரை சொன்னான்.
பயப்படாதே.. நீயும் நானும் நன்றாக வாழ வேண்டும். அதற்கு இந்த மரத்தைப் பயன்படுத்துவோம்.நதிகளைப் பயன்படுத்துவோம். இயற்கை நமக்காகத்தான் வேதம் ஒரு கட்டுப்பாடு மிக்க கலாச்சாரத்தைக் கொண்டு வந்தது.
ஆரிய இனத்தவர்கள் என வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும்...இம் மனிதர்களிடையே இப்படித்தான் வேத மதம் பிறந்தது.
இந்த நல்லெண்ணச்சிந்தனை வளர்ந்து மெருகேற்றியதுதான் சமூக அமைப்பு. கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்ற. ஒரு கட்டுமானம் வேண்டும். அது ஆளப்பட வேண்டும். வேதம் சொன்ன நெறிமுறைகளை வைத்து வாழ கற்றுக்கொள்ளப்பட வேண்டும்.அதற்கு என்ன செய்தார்கள்! பிரித்தார்கள். மூன்றாக பிரித்தார்கள். தங்களைத் தாங்களே நிருவாகம் செய்வதற்கு ஆள்வதற்கு ஒரு பிரிவு. அவர்கள் சொன்னபடி செய்து முடிப்பதற்கு ஒரு பிரிவு. இதோடு நிறுத்தவில்லை.
ஆள்பவனையும் ஆளப்படுபவனையும் வேதம் சொல்லும் நெறி முறைகளைச் சொல்லிக்கொடுத்து... அவர்கள் தடம் பிறழாமல் காப்பதற்காக ஒரு பிரிவு.ஆள்பவன் க்ஷத்திரியன் ஆனான். ஆளப்படுபவன் அதாவது உழைப்பவன் வைசியன் ஆனான். இவர்கள் இரண்டு பேரையும் வேதத்தை வைத்துக் கொண்டு, வேதத்தைக் கற்று நீதி நெறிப்படுத்தியவன் பிராமணன் ஆனான்.
ஆட்சி செய்வதற்கே நேரம் போதவில்லை என அதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தனர் க்ஷத்திரியர்கள். உழைக்க வேண்டும். பிழைக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக வியர்வை சிந்த புறப்பட்டுவிட்டார்கள் சிந்தனாசக்தி குறைந்த அப்போதைய வைசியர்கள்.பிராமணர்கள் பார்த்தார்கள். இவர்கள் இருவருமே வேதத்தை விட்டு விட்டுப் போய்விட்டார்களே....
அதிலுள்ள கருத்துகளை கட்டளைகளை கர்மாக்களை நாம்தானே சிரமேற்கொண்டு செயல் படுத்தவேண்டும். எனவே வேதம் பிராமணர்கள் கைக்குப் போனது.இதெல்லாம் முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தானில் நடந்ததாகத்தான் வேத காலத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் அறிவிக்கின்றன.
ரிசா, குபா, க்ரமு என்கிற நதிகள் வேதத்தில் ஓடுகின்றன. இவை ஆப்கன் தேச நதிகள் என்பதால் வேதகாலம் பெரும்பாலும் ஆப்கன் பகுதியில்தான் நிகழ்ந்துள்ளதாகச் சொல்கின்றன.
வேதத்தில் மூழ்கியிருந்தோரின் முடிவுகள்.வேதம் பிராமணர்கள் கைக்கு போனதும் அறமும் தர்மமும் கர்மாக்களும் செவ்வனே நடந்தேறி வந்ததால்.. வேத மதம் பிராமண மதம் ஆயிற்று.
ஆரிய மதம் வேதமாகி வேத மதம் பிராமண மதமாகி, காலவெள்ளத்தில் அவர்கள் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்க, அப்போது இங்கே சுமார் 450 மதங்கள் இருந்தனவாம். இவைகளில் எது இந்து மதம்?
ஒரு புருஷனும், அவன் பத்தினியும் மழை பெய்த சாலையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். வழியில் ஒரு பள்ளம். இடையில் மழை நீர் தெரு மண்ணோடு கூட்டணி வைத்து ‘சகதி’ அந்தஸ்தோடு கிடக்கிறது. புருஷன் பார்த்தான். ஒரே தாண்டு. இந்தப்பக்கம் வந்துவிட்டான்.
திரும்பிப் பார்த்தால் அவன் பத்தினி பாவமாக நின்று கொண்டிருந்தாள். தாண்டினால் விழ வேண்டியதுதான் என பயந்தாள். ‘கொஞ்சம் கை குடுங்கோ... வந்துடறேன்’ என்கிறாள் பத்தினி. இது உங்களுக்காக சொன்ன உதாரணம்தான்.
இதேபோலத்தான் அன்று... ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?
நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றை யெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.
‘வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்.’
ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது, கூட வந்த பெண்கள் கம்மி.
வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான். ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள்.
ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.
மனு? வேதங்களை எல்லாராலும் படிக்க முடியாது. அஃதை விளங்கிக் கொள்ள அனைவருக்கும் அறிவு குறைவு.
அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளைகளை விளக்கி, புரியும்படி சொல்கிறோம் என எளிமை என்ற பெயரில் செய்யப் பட்டதுதான் மனுதர்மம்.
பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை ‘மனு’ பிளவாக்கியது.
கூடவே, இவர்களைத் தாண்டி ‘சூத்திரர்கள்’ என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக்காரர்களாகவே ஆக்கியது மனு.
பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு - சூத்திரனைப்பற்றி இப்படி எழுதியது.“சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோ பதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை...” இப்படிப் போகிறது மனு.
வந்தேறிய இடத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கவேண்டும் என்றும் பிராமணர்கள் செய்த திட்டம் ‘நன்றாகவே’ வேலை செய்தது.
ஏற்கெனவே பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த க்ஷத்திரியர்களும், வைசியர்களும் சூத்திரர்களை வேலைக்காரர்களாக எடுபிடிகளாக வைத்திருப்பது என்ற பிராமணர்களின் கோட்பாட்டுக்கு குழைந்தனர்.
‘அடே... குழந்தாய் இந்தா பால். இதைக் குடித்து மகிழ்வாய் வாழு’ என்ற வேதத்தை மனு திரித்து... “இந்த பாலை இவன் குடிக்க வேண்டும்... இவன் குடிக்கக் கூடாது. இவன் எச்சில் படாமல் குடிக்க வேண்டும். இவன் பால் கறக்கும் மாட்டை மேய்க்கவேண்டும்” என பிளவு செய்தது.
ஆரியர்கள் பெண்களை அழைத்து வரவில்லை என்று சொன்னேன் அல்லவா? இதற்குக் காரணம் என எடுத்துக்கொள்ள ஏதுவான மனு ஸ்லோகம் ஒன்றை பாருங்கள்.
“பால்யே பிதிர்வஸே விஷ்டேதுபாணிக்ரஹா யௌவ் வனேபுத்ரானாம் பர்த்தரீ ப்ரேதுநபஜேத் ஸ்த்ரீ ஸ்வ தந்த்ரதாம்”
“பெண்ணே... நீ குழந்தைப் பருவம் வரை அப்பன் சொன்னதை கேள்... வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதைக் கேள். உனக்கு குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்க வேண்டும். உனக்கு இது தான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியவற்றவள், ஆண் சொல்படி கேள்.”
இப்படி ‘பெண்ணுரிமை’ பேசும் மனு இன்னொரு இடத்தில் சொல்கிறது.
“பெண்கள் அசுத்தமானவர்கள். உனக்கு விதிக்கப்பட்டுள்ள மந்த்ரோப தேச சம்ஸ்காரங்கள் அவளுக்கு கிடையாது. அவளை மதிக்காதே...” பிராமண ஆணுக்கு சொல்லுவதாய் வந்த கருத்து இது.
மனுவின் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு ‘பூம் பூம்’ மாடுகள்போல தலையாட்டினார்கள் மற்ற வர்ணத்தவர்கள்.
வைதீக கட்டுப்பாடுகள் சர்வாதிகாரமாக விதிக்கப்பட்டன. “கடவுள் இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கிறான். இதுபடி கேள். இல்லையேல் நீ பாபியாவாய்...” என மந்த்ரங்களால் மிரட்டப்பட்டனர் மக்கள்.
பல நூறு வருடங்கள். ஒரு கிரிமினல் லா போன்றே மனுநீதி சமூக கட்டமைப்பை தன் கட்டுக்குள் வைத்திருந்தது. வைதீக கர்மாக்களை பிறருக்கு எடுத்துச் சொல்லி நீதி பரிபாலனம் செய்ய வேண்டிய பிராமணன், க்ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எல்லோரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
இப்படிப்பட்ட ஒரு ‘சாஸ்திர ஏகாதிபத்ய’ சூழ்நிலையில்தான்... இன்றைய நேபாளத்திலிருந்து ஒரு குரல் புறப்பட்டது.“கடவுள் பெயரை சொல்லியும்... கர்மாக்கள் பெயரைச் சொல்லியும் சிந்தனை வளராத அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்கிறீர்களே?
உங்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது? கடவுளா? அவன் எங்கே இருக்கிறான்?
வேதத்தை சாதத்துக்கு (பிழைப்புக்கு) பயன்படுத்தாதீர்கள். பேதம் வளர்க்காதீர்கள். கொடுமைதான் உங்கள் கொள்கை என்றால் வேதம் வேண்டாம். மனு வேண்டாம். கடவுள் வேண்டாம். கர்மாக்கள் வேண்டாம். மனித தர்மம் மட்டும் தான் வேண்டும்...”என அந்த சூழ்நிலையில் மிகமிக வித்தியாசமான குரல் தொனித்தது. அது புத்தர் குரல்.
இன்றைக்கு அணு குண்டு வெடி சோதனைக்கே ‘புத்தர் சிரித்தார்’ என பெயர் வைக்கிறோம். அன்றைக்கு புத்தரே வெடித்தார் என்றால் விளைவுகள் என்ன?

யோகா முத்திரைகள்
முத்திரை யோகம் கதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம்.
சித்தா, ஆயுர்வேதம் மற்றும்
யோகா இவற்றின் அடிப்படை தத்துவம் – உலகில் உள்ள அனைத்தும் ஐந்து மூலப் பொருட்களால் ஆனவை. இந்த ஐம்பூதங்கள் ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம் ஆகியனவாகும். இதில் ஆகாயம் “ஈதர்” என்று விஞ்ஞான ரீதியாக கூறப்படுகிறது. உலகின் பொருட்களை சூழ்ந்து இருப்பது ஆகாயம். பூமி அடர்த்தி மிகுந்தது. நீருடன் சேர்ந்த பூமி கப தத்துவமாக சொல்லப்படுகிறது. காற்று உருவமில்லாத ஆகாயத்துடன் சேர்ந்து உடலில் வாதத் தத்துவத்தை ஏற்படுத்துகின்றன. தீ பித்தம். வெளிச்சத்தை உண்டாக்கும். இந்த ஐம்பூதங்கள் உடலில் சமச்சீராக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இவைகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் வியாதி உண்டாகும்.நமது கைகளின் ஐந்து விரல்கள் ஐம்பூதங்களை குறிக்கின்றன.
1. கட்டைவிரல் – தீ
2. ஆள்காட்டி விரல் – காற்று
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – நிலம்
5. சுண்டுவிரல் – நீர்.
இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.
முத்திரைகளை பயிலும் முறை
1. “பத்மாசனம்” போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் நீங்கள் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம்.
2. ஞான முத்திரைதவிர மற்றவைகளை ஒரேசமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம்.
4. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.
6. முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.
7. வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.
முத்திரைகள் 100 வகைகள் உள்ளன. முக்கியமான சில
1. பிராண முத்திரை – மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்களை சேர்த்து வளைத்து கட்டை விரலை தொடவும்.
பயன்கள் – களைத்த உடலை புதுப்பிக்கும். நரம்புத்தளர்ச்சியை போக்கும் பார்வைத் திறன் அதிகரிக்கும். ஞானமுத்திரையுடன் சேர்த்து செய்தால், தூக்கமின்மை வியாதி குணமாகும். அபான முத்திரையுடன் சேர்த்து செய்தால் நீரிழிவு குணமாகும். உடலில் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும். பொதுவாக ஆரோக்கியம் மேம்படும்.
5. வாயு முத்திரை – ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – மூட்டு வலி – ஆர்த்தரைடீஸ், ரூமாடீஸம், ஸ்பாண்டிலோஸீஸ் இவற்றின் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்த்து செய்தால் முழு பயன் கிடைக்கும்.
6. பிருத்திவி முத்திரை- மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும்.
7. சூரிய முத்திரை – மோதிர விரலை வளைத்து அதன் நுனி கட்டை விரலை தொடவும். கட்டை விரல் வளைந்து மோதிர விரலை அழுத்த வேண்டும். இந்த முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து இரு கைகளால் செய்ய வேண்டும்.
பயன்கள் – டென்ஸன், அதிக உடல் பருமன் இவற்றை குறைக்கும். சோம்பலை போக்கும்.
9. லிங்க முத்திரை – இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். இரண்டு கைகளின் விரல்களை ஒன்றுக்கொன்றுடன் பின்னிக் கொள்ளவும். இடது கட்டை விரலை மட்டும் விட்டுவிடவும். இந்த விரல் தனித்து நிமிர்ந்து நிற்கட்டும் வலது கையின் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் லேசாக இடது கட்டை விரலை தொட்டுக் கொண்டு மற்ற விரல்களை பிடித்துக் கொள்ளவும்.
பயன்கள் – இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்வது நல்லது. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஜீலதோஷம் இருமலுக்கு நல்லது. உடல் எடை குறைக்கும். இந்த பயிற்சியை செய்பவர்கள் பால், நெய், பழங்கள், மற்றும் தண்ணீர் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3. எல்லா பருவத்தினரும், எப்போது வேண்டுமானால் முத்திரைகளை செய்யலாம். விலக்கு “சூன்ய முத்திரை”. இதுமட்டும் காது கேட்காதவர்கள் மட்டும் செய்ய வேண்டிய பயிற்சி.
4. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.
5. இவற்றை செய்யும் போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். அழுத்த வேண்டாம்.
6. முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.
7. வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.
முத்திரைகள் 100 வகைகள் உள்ளன. முக்கியமான சில
1. பிராண முத்திரை – மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்களை சேர்த்து வளைத்து கட்டை விரலை தொடவும்.
பயன்கள் – களைத்த உடலை புதுப்பிக்கும். நரம்புத்தளர்ச்சியை போக்கும் பார்வைத் திறன் அதிகரிக்கும். ஞானமுத்திரையுடன் சேர்த்து செய்தால், தூக்கமின்மை வியாதி குணமாகும். அபான முத்திரையுடன் சேர்த்து செய்தால் நீரிழிவு குணமாகும். உடலில் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும். பொதுவாக ஆரோக்கியம் மேம்படும்.
2. ஞான முத்திரை – இதில் வாயுவையும், அக்னியையும் சேர்ப்பது போல் ஆள்காட்டி விரலின் நுனியால் கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் நிமிர்ந்து நிற்கவும்.
பயன்கள் – மூளைக்கு அதிக ரத்தம் பாயும். மூளை செயல்பாடு, ஞாபகசக்தி அதிகரிக்கும். முன்பு சொன்னபடி ‘பிராண முத்திரையுடன் செய்தால்’ தூக்கமில்லா வியாதியை தீர்க்கும்.
பயன்கள் – மூளைக்கு அதிக ரத்தம் பாயும். மூளை செயல்பாடு, ஞாபகசக்தி அதிகரிக்கும். முன்பு சொன்னபடி ‘பிராண முத்திரையுடன் செய்தால்’ தூக்கமில்லா வியாதியை தீர்க்கும்.
3. அபான முத்திரை – நடு விரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்ட விரலின் அடிப்பகுதியை தொடவும்.
பயன்கள் – நீரிழிவு நோயினால் ஏற்படும் சிறுநீர் பாதிப்புகளை குறைக்கும். அடைப்பட்ட மூக்கு சளியை குறைக்கும். மல ஜலங்கள் சீராக பிரிய உதவும். வியர்வையை அதிகரித்து உடலின் நச்சுப் பொருட்களை களையும்.
பயன்கள் – நீரிழிவு நோயினால் ஏற்படும் சிறுநீர் பாதிப்புகளை குறைக்கும். அடைப்பட்ட மூக்கு சளியை குறைக்கும். மல ஜலங்கள் சீராக பிரிய உதவும். வியர்வையை அதிகரித்து உடலின் நச்சுப் பொருட்களை களையும்.
4. அபான வாயு முத்திரை (மிருத்த சஞ்சீவினி முத்திரை) – ஆள்காட்டி விரல் (வாயு) நுனியை கட்டைவிரலின் (அக்னி) கட்டை விரலின் அடியை தொடவும் பிறகு நடு விரல் மற்றும் மோதிர விரல்களால் கட்டை விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – இந்த முத்திரை இதயத்திற்கு நல்லது. அதனால் இதன் மற்றொரு பெயர் இதய முத்திரை. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். வாயு மற்றும் தலைவலியை குறைக்கும்.
பயன்கள் – இந்த முத்திரை இதயத்திற்கு நல்லது. அதனால் இதன் மற்றொரு பெயர் இதய முத்திரை. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். வாயு மற்றும் தலைவலியை குறைக்கும்.
5. வாயு முத்திரை – ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – மூட்டு வலி – ஆர்த்தரைடீஸ், ரூமாடீஸம், ஸ்பாண்டிலோஸீஸ் இவற்றின் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்த்து செய்தால் முழு பயன் கிடைக்கும்.
6. பிருத்திவி முத்திரை- மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும்.
7. சூரிய முத்திரை – மோதிர விரலை வளைத்து அதன் நுனி கட்டை விரலை தொடவும். கட்டை விரல் வளைந்து மோதிர விரலை அழுத்த வேண்டும். இந்த முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து இரு கைகளால் செய்ய வேண்டும்.
பயன்கள் – டென்ஸன், அதிக உடல் பருமன் இவற்றை குறைக்கும். சோம்பலை போக்கும்.
8. வருன முத்திரை – சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியால் தொடவும்.
பயன்கள் – சிறுநீரக கோளாறுகள் ரத்தத்தில் நச்சுப் பொருள்கள் நீர்மச் சத்து குறைவு சூளுக்கு இவற்றுக்கு எல்லாம் இந்த முத்திரை நல்ல சிகிச்சை.
பயன்கள் – சிறுநீரக கோளாறுகள் ரத்தத்தில் நச்சுப் பொருள்கள் நீர்மச் சத்து குறைவு சூளுக்கு இவற்றுக்கு எல்லாம் இந்த முத்திரை நல்ல சிகிச்சை.
9. லிங்க முத்திரை – இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். இரண்டு கைகளின் விரல்களை ஒன்றுக்கொன்றுடன் பின்னிக் கொள்ளவும். இடது கட்டை விரலை மட்டும் விட்டுவிடவும். இந்த விரல் தனித்து நிமிர்ந்து நிற்கட்டும் வலது கையின் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் லேசாக இடது கட்டை விரலை தொட்டுக் கொண்டு மற்ற விரல்களை பிடித்துக் கொள்ளவும்.
பயன்கள் – இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்வது நல்லது. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஜீலதோஷம் இருமலுக்கு நல்லது. உடல் எடை குறைக்கும். இந்த பயிற்சியை செய்பவர்கள் பால், நெய், பழங்கள், மற்றும் தண்ணீர் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
10. சூன்ய முத்திரை – இந்த முத்திரையில் நடு விரல் கட்டை விரலின் அடி பகுதியை தொட வேண்டும். கட்டை விரல் வளைந்து நடு விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – இந்த முத்திரை காது கோளாறுகளுக்கு சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும். அதே போல் இடது காதில் கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும். காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.எச்சரிக்கை
11. சங்க முத்திரை – இடது கை கட்டை விரலை வலது கை விரல்களால் பிடித்துக் கொள்ளவும். இடது ஆள்காட்டி விரல் வலது கை கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மீதமுள்ள இடது கை மூன்று விரல்களால் வலது கை விரல்களை லேசாக அழுத்தவும். இந்த பயிற்சியை கைகளை மாற்றி மாற்றி செய்யவும்.
பயன்கள் – தொண்டை பாதிப்புகள், தைராயீடு பிரச்சனைகள், ஜீரண கோளாறுகள் இவற்றை குறைக்கும். குரல் வளத்தை அதிகரிக்கும்.
12. ஆகாய முத்திரை – கட்டை விரலின் நுனியை நடு விரலால் தொடவும்.
பயன்கள் – இதயத்திற்கு நல்லது. தேவைப்பட்டால் மட்டும் இந்த முத்திரையை செய்யவும்.
நமது பழங்கால முனிவர்ககளும் சித்தரகளும் விரல் நுனிகளில் ஒரு வித மின்சக்தி இருப்பதாக கருதினர். முத்திரைகளை பயிலும் போது, இந்த மின்சக்தி பல பலன்களை தரும் என்று நம்பினர்.நமது கைகளின் ஐந்து விரல்கள் ஐம்பூதங்களை குறிக்கின்றன
பயன்கள் – இந்த முத்திரை காது கோளாறுகளுக்கு சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும். அதே போல் இடது காதில் கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும். காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.எச்சரிக்கை
1. காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.
2. இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.
2. இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.
11. சங்க முத்திரை – இடது கை கட்டை விரலை வலது கை விரல்களால் பிடித்துக் கொள்ளவும். இடது ஆள்காட்டி விரல் வலது கை கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மீதமுள்ள இடது கை மூன்று விரல்களால் வலது கை விரல்களை லேசாக அழுத்தவும். இந்த பயிற்சியை கைகளை மாற்றி மாற்றி செய்யவும்.
பயன்கள் – தொண்டை பாதிப்புகள், தைராயீடு பிரச்சனைகள், ஜீரண கோளாறுகள் இவற்றை குறைக்கும். குரல் வளத்தை அதிகரிக்கும்.
12. ஆகாய முத்திரை – கட்டை விரலின் நுனியை நடு விரலால் தொடவும்.
பயன்கள் – இதயத்திற்கு நல்லது. தேவைப்பட்டால் மட்டும் இந்த முத்திரையை செய்யவும்.
நமது பழங்கால முனிவர்ககளும் சித்தரகளும் விரல் நுனிகளில் ஒரு வித மின்சக்தி இருப்பதாக கருதினர். முத்திரைகளை பயிலும் போது, இந்த மின்சக்தி பல பலன்களை தரும் என்று நம்பினர்.
1. கட்டைவிரல் – தீ
2. ஆள்காட்டி விரல் – காற்று
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – நிலம்
5. சுண்டுவிரல் – நீர்.
இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.
கிறிஸ்துவின் தொலைந்து போன சமாதி
கிறிஸ்துவின் தொலைந்து போன சமாதி
சமீபத்தில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய ஒரு தொலைக்காட்சி ஒலி ஒளிப் படம் இது. வழக்கம் போல பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற கிறிஸ்துவ மதச் சார்புள்ள நாடுகளில் வெளியிடப்பட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
1980களில் ஜெருசலம் நகரில் பல கட்டிடங்கள் கட்டப்படுகின்றன, அப்போது அந்த ஊரில் ஆங்காங்கே இருக்கும் பல பழமையான சமாதிகள் இடிக்கப் படுகின்றன. தீவிர மத நம்பிக்கைகள் கொண்ட நாடான இஸ்ரேலில் இது போன்ற சமாதிகள் இடிக்கப்படுவதால் முணுமுணுப்புகள் எழுந்தன.
ஆகவே அந்த பழங்காலத்து சமாதிகளை காக்க அந்த சமாதிகளில் உள்ள பொருட்களை இஸ்ரேல் அருங்காட்சியகத்துறை பல குடோன்களில் அடைத்து வைக்க ஆரம்பித்தது.
இங்கு சமாதி என்ற சொல் சரியானது அல்ல என்றே சொல்ல வேண்டும். இவை நம் ஊரில் இருக்கும் சமாதிகள் போன்றவை அல்ல.
ஒரு குகை அதில் வைக்கப்பட்டிருக்கும் 1x1 அடி நீளமுள்ள சில பெட்டிகள். இவைதான் அந்த காலத்து யூத சமாதிகள்.
இந்த யூத சமாதிகள் வைக்கும் பழக்கம் மிகக் குறைவான காலமே இருந்து வந்தது. சுமார் 100 ஆண்டுகள் மட்டுமே இந்த பழக்கம் நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது. அதற்கு பின்னால் படையெடுப்புகள் போன்ற காரணங்களால் இவை முற்றிலுமாக குறைந்து போய் விட்டது.
யூத மத பழக்கத்தின் படி ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிப்பட்ட சமாதி குகைகள் இருந்து வந்தன. ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் இறந்தவுடன் இறந்தவரின் உடலை அந்த குகைக்குள் சென்று வைப்பார்கள். ஒரு வருடம் கழித்து மீண்டும் வந்து அந்த உடலில் மிஞ்சி இருக்கும் எலும்புகளை ஒரு பெட்டியில் வைத்து அந்த குகையில் ஒரு பகுதியில் வைத்து விடுவார்கள். இது தான் அந்தக் காலத்து யூத சமாதிகள்.
குடும்பத்தினர் யாருடைய பெட்டியில் யாருடைய எலும்புகள் இருக்கிறது என்பதை அடையாளம் கண்டு கொள்ள இறந்தவரின் பெயரை பெட்டியில் எழுதி வைப்பார்கள்.
இந்த பெட்டிகளை Ossuary(ஆஸூவரிகள்) என்று சொல்லுவார்கள். இந்த ஆஸீவரிகளில் உள்ள பெயர்கள் இஸ்ரேல் அருங்காட்சியகத்துறை தொகுத்து வைத்துள்ளது.
இந்த ஒளி ஒலிப் படத்தை எடுத்த இயக்குனர் அந்த தொகுத்து வைக்கப்பட்டுள்ள பகுதிகளை படிக்கும் சமயம் அதில் உள்ள ஒரு பெயர் அவரை ஈர்த்தது. அந்தப் பெயர்தான்
யேசுவா பார் யகோசே
ஹீப்ரூவில் இருக்கும் இந்தப் பெயரை ஆங்கிலப்படுத்தினால் நமக்குக் கிடைப்பது
Jesus son of Joseph
இந்தப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது 1980களில்.
இங்கு சற்று வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டி இருக்கிறது.
புனித மேரிக்கும் ஜோசப் என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட வேளையில், புனித மேரி பரிசுத்த ஆவியால் தனக்கு குழந்தை உண்டானதாக அறிவித்தார். ஜோசப் அவரை திருமணம் செய்து கொண்டு கிறிஸ்துவையும் தத்தெடுத்துக் கொண்டார். ஆகவே கிறிஸ்து அவர்களின் வளர்ப்புத் தந்தை பெயர் ஜோசப். மேரிக்கும், ஜோசப்புக்கும் வேறு குழந்தைகளும் உண்டு. அதாவது கிறிஸ்து அவர்களுக்கு மரியாம்னே, சலோமி என்ற இரண்டு தங்கைகளும் ஜோசப், ஜேம்ஸ், சைமன், ஜுடாத் என்ற நான்கு தம்பிகளும் உண்டு.
மேலும் கிறிஸ்து அவர்கள் சிலுவையில் அறைந்து இறந்த உடன் அவரை ஒரு குகையில் சென்று வைத்ததாகவும் அந்த குகைக்கு மூன்று நாளுக்கு பின்னால் சென்ற மேரி மதலான்(மேரி மங்க்டாலின்) அங்கு கிறிஸ்துவின் உடலைக் காணாமல் தேட கிறிஸ்து உயிர்தெழுந்து மேரி மதலான் அம்மையாருக்கு காட்சியளித்தார்.
இவை அனைத்தும் பைபிளின் பழைய ஏற்பாடுகளில் இருந்து நமக்குத் தெரிய வரும் தகவல்.
இந்த சரித்திர உண்மைகளைப் ஒருவர் அறிந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் அவருக்கு, ஜோசப் மகன் இயேசுவின் சமாதி என்ற செய்தியைக் கேட்டவுடன், இந்த சமாதி இயேசு கிறிஸ்துவுடையதாக இருக்கலாமோ என்ற கேள்வி தோன்றி இருக்க வேண்டுமல்லவா? ஏன் இந்தக் கேள்வி இந்த சமாதி கண்டுபிடிக்கப்பட்ட 1980களில் எழவில்லை?
ஏனெனில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சமாதி இவ்வளவு சாதாரணமாக கண்டுபிடிக்கப் பட்டிருக்க முடியாது என்று மக்கள் நினைத்ததால் இருக்கலாம்.
இல்லை இயேசு என்ற பெயரும், ஜோசப் என்ற பெயரும் பழங்காலத்து ஜெருசலத்தில் மிக அதிகமாக புழக்கத்தில் இருந்த பெயர். அந்த காலத்து ஜெருசலம் தெருவில் நின்று இயேசு என்று கூப்பிட்டால் 10% சதவீதம் பேர் திரும்பிப் பார்ப்பார்கள். ஆகவே இது அவருடைய சமாதியாக இருக்க முடியாது என்று தீர்மானித்து விட்டார்கள்.
ஆனால் இந்த ஒளி ஒலிப் படத்தில் இயக்குனரால் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவர் இதனை மேலும் ஆராய்ச்சி செய்ய முடிவு செய்தார்.
முதலில் இஸ்ரேல் அருங்காட்சியகத்துறைக்கு சென்று அந்த சமாதியில் உள்ள மற்ற பெயர்களை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார்.
அங்கு கிடைத்த அடுத்தப் பெயர்
மரியா
அதாவது புனித மேரி அல்லது மரியம்.
இயேசு, ஜோசப், மேரி இந்த மூன்று பெயரும் ஒரு குடும்ப சமாதிகள் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் கிடைக்கிறது. நமக்குத் தெரிந்த இயேசுவை விடுத்து வேறு ஒரு இயேசு கிறிஸ்து, மேரி, ஜோசப் என்ற மூவர் இருந்திருக்க முடியுமா? இந்தக் கேள்விகளுடன் மேலும் அதே சமாதியில் உள்ள வேறு பெயர்கள் ஆராய ஆரம்பிக்கிறார். அப்போது அவருக்கு கிடைத்த இன்னொரு பெயர்
யோசே
இந்தப் பெயரையும் நாம் பைபிளின் பழைய ஏற்பாடுகளில் காண்கிறோம். இயேசுவின் தம்பி ஜேம்ஸை குறிப்பிடும் ஒரிடத்தில் இந்தப் பெயரை குறிப்பிடுகிறார்கள்.
சரி இப்போது ஜெருசலம் நகருக்கு செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த நகரில் சுமார் ஒரு 60,000 பேர் வசிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் அனைவரையும் ஒரிடத்தில் கூப்பிட்டு வைத்து இயேசு என்பவர்கள் எல்லோரும் எழுந்து நில்லுங்கள் என்றால் 6,000 பேர் எழுந்து நிற்பார்கள். ஜோசப் என்று கூப்பிட்டால் 12,000 பேர் எழுந்து நிற்பார்கள் மேரி என்று கூப்பிட்டால் 15,000 பேர் எழுந்து நிற்பார்கள்.
இப்போது இயேசு என்று கூப்பிடுகிறோம் 6,000 பேர் எழுந்து நிற்பார்கள், இயேசு ஜோசப்பின் மகன் என்று கூப்பிட்டால் அதில் பாதி பேர் 3,000 பேர் இருக்கிறார்கள் என்று வைப்போம். இந்த இயேசு என்பவருக்கு மேரி என்ற பெயரில் ஒரே இடத்தில் சமாதி அமைக்கும் அளவுக்கு நெருக்கமான சொந்தக்காரர்கள் இருப்பவர்கள் எழுந்து நில்லுங்கள் என்றால் எத்தனை பேர் மிஞ்சுவார்கள். அதோடு யோசே என்ற பெயரையும் எடுத்துக் கொண்டால் எத்தனை பேர் இருப்பார்கள்?
இந்த சமாதியில் கிடைத்த மற்றொரு பெயர் தான்
மாரா மரியம்னே
இந்தப் பெயர் இது வரை இஸ்ரேலில் கிடைத்துள்ள ஆஸ்சுவரிகள் அனைத்திலும் ஒரே இடத்தில் தான் கிடைத்துள்ளது.
இங்கு மாரா என்பது இன்றும் பூசாரிகளுக்கு கொடுக்கப் பட்டு வரும் பெயர். இந்தப் பெயரை ஆங்கிலப்படுத்தினால் கிடைப்பது
Master Mariamne
இந்தப் பெயர் பைபிளின் எந்த இடத்திலும் உபயோகப் படுத்தப்படவில்லை. ஆனால் இந்தப் பெயரை வேறு ஒரு மிக முக்கியமான இடத்தில் காண முடிகிறது. 1930களில் கிடைத்த Dead sea scrollsகளில் தான் அது.
அதில் மேரி மதலான் அம்மையாரை இதே பட்டத்துடன் மாரா மரியம்னே என்று பல இடங்களில் குறிப்பிடுகிறார்கள்.
அதே பெயர் இந்த சமாதியிலும் இருக்கிறது.
இது ஒரு மிக அரிய விஷயம். யோசித்துப் பாருங்கள் கிறிஸ்து, புனித மேரி, ஜோசப், யோசே என்ற அனைத்தும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுடன் அந்த குடும்பத்தைச் சேராத ஆனால் கிறிஸ்துவின் மிக நெருக்கமான சீடர்களில் ஒருவரான மதலான் அம்மையாரின் பெயரும் குறிப்பிடப்படுகிறது.
இது மிக மிக அரிதான ஒரு விஷயம் என்று குறிப்பிடுகிறார்கள் இயக்குனர்.
மேலும் இந்த சமாதிகள் மேல் கட்டிடங்கள் கட்டபட்டதாக நினைத்திருந்தார் இந்த் ஒளி ஒலிப் படத்தின் இயக்குனர். ஆனால் இந்த சமாதியைத் தேடிச் சென்ற இடத்தில் அவருக்கு அந்த சமாதிக்குள்ளே செல்லவும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அந்த சமாதியில் அவர் இன்று அமெரிக்க டாலரில் உள்ள முக்கோண வடிவத்தை அந்த சமாதியின் நுழைவாயிலில் கண்டு பிடிக்கிறார்.
இந்த முக்கோணம் knights templar என்பவர்களுடன் சம்பந்தப்பட்ட ஒரு குறியீடு ஆகும். Davinci code படித்தவர்களுக்கு knights templar என்பவர்களுக்கும் வாடிகன் நகருக்கு இருந்த பகை போன்றவையும், வாடிகன் நகரம் மூலமாக இவர்கள் மிகப் பெரிய பணக்காரர்கள் ஆனதும், பின் வாடிகனாலேயே படுகொலை செய்யப்பட்டதும் தெரியவரும்.
ஆனால் அந்த சமாதியை மேலும் பார்வையிட முடியாமல் இஸ்ரேல் அருங்காட்சியகத்துறை இவர்களை வெளியேறச் சொல்லி விட்டது.
இந்தப் படத்தின் இயக்குனர் இந்த ஒளி ஒலிப் படத்தை முடிக்கும் முன் இந்த சமாதி இயேசு கிறிஸ்துவுடையது இல்லையென்றால், பின் யாருடையது, எல்லாம் ஆண்டவனுக்கே வெளிச்சம், இவரின் சமாதியைப் போல் மிக முக்கியமான ஒரு சர்ச்சைக்குரிய செய்தி நோவாவின் பேழை அதையும் துருக்கியின் மலைப்பகுதியில் கண்டுபிடித்துள்ளார்கள், அதைப்பற்றி பின்பு பார்ப்போம்,
இயேசு கிறிஸ்துவிற்கு திருமணமாகிவிட்டது அவருக்கு ஒரு குழந்தையும் உண்டு. அவர் ஒரு சராசரி மனிதன், கடவுளின் நேரடிக் குழந்தை அல்ல. ஒரு தீர்க்கதரிசி மட்டுமே. டான் பிரவுன் அவர்களின் நாவலான டாவின்வி கோட் நாவலில் ராபர்ட் லாங்டன் என்ற கதாபாத்திரம் சோபியா என்ற பாத்திரத்திடம் இவ்வாறு கூறும் சமயம் சோபியா மட்டும் அல்ல எனக்கும் தூக்கிவாரிப் போட்டது.
என்னை முதன் முதலில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை வித்தியாசமான ஒரு கோணத்தில் பார்க்க வைத்தது டாவின்சி கோட் நாவல்தான்.
இந்த நாவலின் ஆரம்பம் லாவுரே( Louvre ) என்ற மியூசியத்தில் ஆரம்பிக்கிறது. அந்த மியூசியத்தின் மேற்பார்வையாளர் ஜாக்குவஸ் கொலை செய்யப்படுகிறார்.அவர் இறக்கும் நேரத்தில் அவர் விழுந்து கிடக்கும் இடத்தில் ராபர்ட் லாங்டன் பெயரையும் சில எண்களையும் சில வார்த்தைகளையும் எழுதி வைத்து விட்டு இறந்து விடுகிறார். ராபர்ட் லாங்டனை ஹாவர்ட் பல்கலை கலகத்தில் சரித்திரம் மற்றும் கூறியீட்டியல் பேராசிரியர். சரித்திர ஆராய்ச்சி செய்து வருபவர்.
அங்கு வரும் காவல்த்துறை ராபர்ட் லாங்டன் பெயரை பார்த்து விட்டு ராபர்ட்தான் கொலை செய்தார் என்று சந்தேகம் கொண்டு ராபர்டின் பெயரை அழித்துவிட்டு சம்பவ இடத்திற்கு ராபர்டை அளைத்து வந்து விசாரணை செய்கிரார்கள். ஜாக்குவஸின் மரண வாக்குமூலத்தில் எண்கள் இருப்பதால் கிரிப்ட்டோகிராபி துறையின் உதவியை நாடுகிறார்கள் காவல் துறையினர்.
அங்கு வேலை பார்க்கும் சோபியா ஜாக்குவஸின் பேத்தி. சோபியா அந்த செய்தியைப் பார்த்தவுடனே தன்னுடய தாத்தா தனக்காகதான் இந்த செய்தி என்பதை உணர்ந்து கொள்கிறாள். இந்த செய்தியால் ராபர்ட் கைது செய்யப்படலாம் என்பதையும் உணர்ந்து இந்த செய்தியை முழுவதுமாக புரிந்து கொள்ள ராபர்டை தொடர்பு கொள்ளச் சொல்லி இருக்கிறார் தன்னுடய தாத்தா என்பதயும் புரிந்து கொள்ளும் சோபியா, இதனால் ராபர்டிற்கு ஆபத்து உள்ளது என்று உணர்ந்து ராபர்டை போலிஸில் இருந்து தப்புவிக்கிறார்.
இப்படி கொலை என்று சஸ்பென்ஸ் நாவலாக ஆரம்பிக்கும் டாவின்சி கோட் ஒரு புதையல் வேட்டையாக மாறுகிறது. ஜாக்குவஸ் இறக்கும் முன் தான் பல காலம் பாதுகாத்து வந்த ரகசியம் யாருக்கும் தெரியாமலே தொலைந்து விடக் கூடும் என்ற சூழ் நிலை உருவாகி விட்டதாலும், தன்னுடய பேத்தியான சோபியாவிற்க்கும் ஆபத்து இருக்கலாம் என்பதாலும், சோபியாவிற்கு ராபர்ட் லாங்டனை சந்திக்குமாறு விடுகதை போல ஒரு செய்தி எழுதி வைத்தார் என்பதை அறிகிறோம்.
அவர் காத்து வந்த ரகசியம் ஹோலி கிரைல்( holy grail ) எனப்படும் ஒரு கோப்பை என்று அறிகிறோம். இந்தக் கோப்பை கிறிஸ்து தன்னுடய கடைசி உணவு உண்ணும் சமயம் வைண் குடிக்க உபயோகப்படுத்திய கோப்பை என்றும் அறிகிறோம். இந்த கோப்பைதான் உலகில் உள்ள எல்லா புதையலிலும் மிக முக்கியமானது, விலை உயர்ந்தது. கிங் ஆர்தர் போன்றவர்கள் இந்த கோப்பையை கண்டு பிடிப்பதையே தன்னுடய வாழ்க்கையின் லட்சியமாக வைத்து இருந்தார்கள்.
ஆனால் சீக்கிரமே லாங்டன் ஹோலி கிரைல் என்பது உண்மையில் ஒரு கோப்பை அல்ல என்பதை விளக்கி அதன் உண்மையான அர்த்ததை விளக்கி கூறும் சமயமே நாம் முதலில் பாராவில் எழுதி இருக்கும் வசனத்தை ராபர்ட் சோபியாவிடம் கூறுகிறார்.
மேலும் கிறிஸ்து மேரி மக்தலாடின் என்ற பெண்மணியை திருமணம் செய்துள்ளார் அவர்களுடய குடும்பம் பல தலைமுறைகளை தாண்டி இன்றும் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறார். அதற்க்கான ஆதாரங்கள் அடங்கி உள்ள ஆவனங்களே ஹோலி கிரைல் என்று அழைக்கைப் படுகிறது என்றும் கூறுகிறார். அதை அடையுதற்காகவே ஜாக்குவஸ் கொலை செய்யப்பட்டுருக்கிறார் என்பதையும் கூறுகிறார். இதன் பிறகு ராபர்டும், சோபியாவும் ஹோலி கிரைலை எதிரிகள் அடையும் முன் எவ்வாறு ஜாக்குவஸ் அமைத்திருக்கும் ஒவ்வொரு புதிருக்கும் விடை கண்டு பிடித்து அடைகிறார் என்பதுதான் நாவல்.
இந்த நாவல் மற்ற சஸ்பென்ஸ் நாவல்களில் இருந்து வித்தியாசப்பட்டுருப்பதற்க்கு கிறிஸ்துவின் வாழ்க்கை நாவலில் பின் புலமாக சொல்லப்பட்டுருப்பது ஒரு காரணம்.
மற்ற காரணம் என்னவென்றால் இந்த நாவலின் கதையை ஒட்டி பல சுவாரஸ்யமான தகவல்களும் சொல்லப்பட்டுருப்பதுதான். உதாரணமாக தெய்வீக எண் என்று அழைக்கப்படும் 1.618ன் ஆச்சர்யமான விஷேசங்கள் நாவலில் கதையின் போக்கிலேயே சொல்லப்படுகிறது.
நைட்ஸ் டெம்ப்லர்(Knights Templar)( இங்கிலாந்து நாட்டில் 1500ல் இருந்த ஒரு குழுவினர் இவர்கள் திடிரென்று சில வருடங்களில் பணம், அதிகாரம் பெற்று போபைவிட பலம் வாய்ந்தவர்களாகிவிட்டர்கள். இவர்களின் பண பலம், அதிகார பலம் கண்டு பயந்த போப் இவர்களை கொலை செய்ய ஏற்பாடு செய்தார் என்று பல வதந்திகள் இவர்களைப் பற்றி உண்டு. இன்றும் அவர்கள் எவ்வாறு பணம், அதிகாரம் அனைத்தியும் அடைந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது.) போன்ற சரித்திரத்தில் புதிராக இருக்கும் பல விஷயங்கள் நாவல் முழுவதும் கதையின் ஒட்டத்தினிடயே சொல்லப்பட்டிருக்கிறது.
மேரி மக்தலாடின் விபச்சாரி அல்ல
பல வல்லுனர்களும் உறுதி செய்யும் தகவல் இது. கிறிஸ்து ஒரு விபச்சாரியை மக்கள் கல் கொண்டு அடிக்கும் சமயம் பாவம் செய்யாதவர் மட்டும் இந்த பெண்ணை அடிக்கலாம் என்று கூறியது உண்மை ஆனால் இந்தப் பெண் மேரி மக்தலாடின் அல்ல என்று பல சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்ட ஒரு விசயம். டாவின்வி கோட் நாவலில் மேரி மக்தலாடினின் பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காகதான் அவரை விபச்சாரி என்று பிரச்சாரம் செய்யப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது இது ஒரு கோணத்தில் சரி என்றே சொல்லலாம் போப் கிரிகாரி என்பவர்தான் முதன் முதலில் மேரி மக்தலாடினை விபச்சாரி என்று கூறினார். 1969ம் வருடம் கிறிஸ்துவ தேவாலயம் மேரி மக்தலாடினும், அந்த விபச்சாரியும் வேறு வேறு நபர்கள் என்பதை தெளிவு படுத்தியுள்ளது.
பைபிள் 100 சதவீதகம் உண்மையை சொல்லவில்லை
இதை உறுதிபடுத்திக் கொள்ளப்பட்ட தகவல்களில் சேர்ப்பதே சர்ச்சைக்குரியதுதான். ஆனால் இதில் உண்மை உள்ளது என்பதை பலர் ஒப்புக் கொண்டுள்ளார்கள். பைபிளில் என்தெந்த பகுதிகள் வைக்கப் பட வேண்டும் என்பதை தீர்மானம் செய்தவர்கள் கிறிஸ்து கடவுள் என்று தீவிரமாக நம்பிக்கை கொண்டவர்கள் ஆகவே அவர்கள் கிறிஸ்துவை தெய்வப் பிறவியாக காட்டும் பகுதிகளேயே வைத்தார்கள் என்பது உண்மை. பைபிளில் அவருடைய சீடர்கள் எழுதிய பல பகுதிகள் வைக்கப் படவில்லை. இன்று நமக்கு டெல் ஸீ ஸ்கூரொல் போன்றவை கிடைத்துள்ளன அவை கிறிஸ்துவின் போதனைகளை சொல்லும் அதே நேரத்தில் அவரை ஒரு தெய்வப் பிறவி என்ற நோக்கில் அல்லாமல் ஒரு தலை சிறந்த தலைவனாக சித்தரிகிறது. நாம் இந்த ஆவனங்களை பொய் என்று ஒதுக்கி தள்ளி விட முடியாது ஏனெனில் இதுவும் கிறிஸ்து அவர்களில் சீடர்களாலேயே எழுதப்பட்டது. இது பொய் எனில் பைபிள் மட்டும் எந்த அளவு உண்மை??
டாவின்சியின் லாஸ்ட் சப்பர் கிறிஸ்து பற்றிய உண்மைகளை வெளிப்படுத்திகிறது
டாவின்சி கோட் நாவலின் மிக முக்கிய கிறிஸ்துவின் திருமணத்திற்கு முக்கிய ஆதாரமாக காண்பிக்க படுவது டாவின்சியின் லாஸ்ட் சப்பர் ஓவியம்தான். 

இந்த ஓவியத்தில் கிறிஸ்துவின் இடது புறத்தில் உள்ளது ஒரு பெண் அது மேரி மங்லாடின் என்று கூறப்பட்டுள்ளது. இவர்களுடைய ஆடைகளையும் கவனியுங்கள் கிறிஸ்துவின் ஷாலும், மேரியின் மேலாடையும் மேரியின் ஷாலும் கிறிஸ்துவின் சட்டையும் ஒத்திருப்பதைக் காணுங்கள். டாவின்சி அப்படி வரைந்தது இருவரும் கணவன் மனைவி என்பதைக் குறிக்கத்தான் என்று டாவின்சி கோட் நாவலில் கூறப்படுகிறது. மேலும் இருவருடைய ஷாலும் அதற்கு நடுவே உள்ள இடைவெளியும் M என்ற சொல் உருவாவது போல தோன்றுகிறது பாருங்கள் இந்த சொல் மேரியை குறிக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தில் மிக முக்கியமாக கவனிக்க பட வேண்டிய விசயம் என்னவென்றால் தன்னுடய கடைசி உணவைக் கொண்ட சமயம் கிறிஸ்து ஒரு கோப்பையில் வைண் பருகிய பின் அந்த ஒரு கோப்பையில் இருந்தே அவருடய சீடர்கள் அனைவரும் பின் வைண் பருகினார்கள் என்றுதான் இன்று வரை கூறப்பட்டு வருகிறது. அந்த கோப்பையே புனிதக் கோப்பை என்று அழைக்கப்படுகிறது அதுவே இன்று உலகில் மிகவும் தேடப்பட்டு வரும் புதையல். ஆனால் இந்த படத்தில் அந்த கோப்பை இல்லவே இல்லை. டாவின்சி மேரி மக்தலாடினையே புனிதக் கோப்பையின் வடிவாக கருதி வரைந்துள்ளார் என்றும் டாவின்சி கோட் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
இதைப் பற்றி வல்லுனர்களிடம் பல கருத்துக்கள் நிலவுகின்றன. பலர் கிறிஸ்துவின் அருகில் உள்ளது ஜான் என்று கூறுகிறார்கள். ஆனால் M என்ற எழுத்திற்க்கும் புனிதக் கோப்பை பற்றியும் ஒரு விளக்கமும் இல்லை.
கிறிஸ்து ஒரு யூதர் ஆகவே அவர் திருமணம் செய்திருக்க வேண்டும்.
கிறிஸ்து வாழ்ந்த கால கட்டத்தில் யூதர்கள் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சூழ் நிலை நிழவியது ஆகவே அவருக்கும் திருமணம் நடந்திருக்க வேண்டும்.
இந்தக் கருத்து பற்றியும் வல்லுனர்கள் கிறிஸ்து ஒரு விதிவிலக்காக இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள் ஆனால் கண்டிப்பாக கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற யூதர்களின் பழக்க வழக்கங்கள் இருந்ததும் உண்மை.
கினாஸ்டிக் காஸ்பலிஸில்( Gnostic Gospels ) கிறிஸ்துவிற்க்கும் மேரிக்கும் காதல் இருந்திருக்கலாம் போன்று இருக்கும் பகுதிகள்.
கினாஸ்டிக் காஸ்பலிஸ் என்பது சில வருடங்களுக்கு முன் கண்டெடுக்கப்பட்டது இது கிறிஸ்துவின் போதனைகளை சொல்லும் அதே நேரத்தில் அவருக்கு மேரியுடன் காதல் இருந்தது என்பதைப் போன்று எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக கிறிஸ்து மேரியை முத்தமிடுவது போன்று சில பகுதிகளில் எழுதப்பட்டுள்ளது.
இதைப் பற்றி வல்லுனர்களிம் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் இந்த ஆவனங்களை நம்ப முடியாது என்று கூறுகிறனர். சிலர் கிறிஸ்து தன்னுடய சீடர்கள் அனைவரையுமே முத்தமிடுவார் என்று கூறுகிறார்கள்.
இது வரை சேகரித்த தகவல் பற்றி…
டாவின்சி கோடில் ஒரு வசனம் பைபிள் சொர்க்கத்தில் இருந்து பேக்ஸில் வரவில்லை என்ற வசனம்.
பசி இல்லாமல் அனைத்து மக்களும் வாழ வேண்டும் என்று பாடு படும் அனைவரும் தெய்வப் பிறவிகள்தாம் அந்த வகையில் கிறிஸ்துவும் தெய்வப் பறவிதான்.
வாடிகன் நகரம் கிறிஸ்துவின் பெயராலே, போப் என்ற ஒருவரின் கருத்திக்களுக்கு ஏற்ப நடந்து கொண்டு வருகிறது. பல போப்புகள் மிக நன்றவர்களாகவே இருந்தாலும் சிலர் சூனியக்காரிகள் எரிப்பு என்று படித்த பெண்களை கொல்வது, சிலுவை யுத்தம் என்று நாடுகள் மேல் படை எடுப்பது என்று தவறான பல காரியங்களை செய்துள்ளார்கள். இன்று உள்ள மத தீவிரவாதம், நிறக் கொடுமை போன்ற விசயங்கள் தேவாலங்களில்தான் ஆரம்பித்தது.
இங்கு கூற வருவது என்னவெனில் கிறிஸ்து என்பவர் தெய்வப் பிறவியாக இருக்கலாம் ஆனால் வாடிகன் நகரத்தில் உள்ளவர்கள் அவ்வாறு இல்லை.
ஆகவே கிறிஸ்து உண்மையாக திருமணம் ஆனவராக இருந்தாலுமே அதை மறைக்க வேண்டும் என்று வாடிகன் முடிவு செய்திருந்தால் அது அவ்வாறே நடந்திருக்கும்.
கிறிஸ்து திருமணம் ஆனவாரா என்ற கேள்விக்கு பதில் ஆமாம் இல்லை என்று பதில் சொல்லக் கூடிய நிலை இல்லை என்று பதிவை முடிக்கவேண்டும்.
இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறு
இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறு (Unknown years of Jesus) என்பது, இயேசுவின் இளமைப் பருவத்திற்கும் (12 வயது) அவர் தமது 30ஆம் வயதில் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கிய காலத்திற்கும் இடைப்பட்ட காலக் கட்டத்தில் அவர் என்ன செய்தார் என்ற மர்மத்தை விளக்குவதற்கான முயற்சியைக் குறிக்கும். கிறித்தவர்களின் புனித நூலாகிய விவிலியத்தில் காணப்படாத பல செய்திகளை உள்ளடக்கி, இயேசுவின் “மறைந்த வாழ்வு” பல விதங்களில் பல நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய புனைவுகளை மைய நீரோட்ட கிறித்தவ சபைகள் உண்மையென ஏற்பதில்லை.
இயேசு பற்றி முக்கியமான இருவகைக் கற்பனைக் கதைகள்
புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள நான்கு நற்செய்தி நூல்களிலும் காணப்படாத செய்திகளைக் கூறுவதற்காக எழுந்த நூல்கள் பண்டைக் காலத்திலிருந்தே தோன்றியுள்ளன. இயேசுவைப் பற்றிக் குறிப்பாக இரண்டு காலக்கட்டங்கள் ”மர்மமாக” உள்ளன. அவை:
1) இயேசுவின் இளமைப் பருவம்பற்றி நற்செய்திச் செய்திகள் பல உள்ளன. ஆனால் அவர் பன்னிரண்டு வயதில் எருசலேம் கோவிலில் காணாமற்போய், பின்னர் பெற்றோரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களோடு நாசரேத்துக்குப் போய் அங்கே வாழ்ந்துவந்தார் என்று கூறுவதோடு அந்த இளமைப் பருவச் செய்திகள் நின்றுவிடுகின்றன. அதன் பிறகு 18 ஆண்டுகள் கழிந்து, இயேசுவுக்கு 30 வயது ஆனபோது அவர் திருமுழுக்கு யோவானிடம் யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்றார் என்றும் தமது பணி வாழ்வைத் தொடங்கினார் என்றும் நற்செய்தி நூல்கள் கூறுகின்றன. அப்படி என்றால், 12 வயதிலிருந்து 30 வயது வரை இயேசு என்ன செய்தார்? தம் பெற்றோரோடு வாழ்ந்து வந்தாரா? என்ன தொழில் செய்தார்? வேறு இடங்களுக்கோ நாடுகளுக்கோ போனாரா? - இக்கேள்விகள் ஒரு தொகுப்பு. இவ்வகையான கேள்விகளுக்குப் பலரும் கற்பனைப் புனைவுகளான பதில்களை வரலாற்றில் கொடுத்துள்ளனர்.
2) இன்னொரு கேள்வித் தொகுப்பும் உள்ளது. அதாவது இயேசு உண்மையிலேயே சிலுவையில் இறந்தாரா? அவர் இறந்திருந்தால் அதன் பின் உயிர்பெற்றெழுந்தாரா? வேறு யாராவது இயேசுவின் இடத்தில் சிலுவையில் இறந்திருந்தால் இயேசுவுக்கு என்ன ஆயிற்று? அதன் பிறகு அவர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்? என்ன செய்தார்? - இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளும் உள்ளன. இவற்றிற்கும் கற்பனைப் புனைவுகளான பதில்கள் பல காலமாகவே தரப்பட்டுள்ளன.
“இயேசுவின் மறைந்த வாழ்வு” என்று சொல்லும்போது மேலே கூறப்பட்ட முதல் தொகுதிக் கேள்விகளுக்கு என்ன பதில்கள் தரப்பட்டுள்ளன என்று ஆய்வதுதான் நோக்கமே ஒழிய, இரண்டாம் வகைத் தொகுதி சார்ந்த கேள்விகள் அதில் உள்ளடங்கா
பிற்காலப் புனைவுகள்
இயேசு தம் இளமைக் காலத்தில் பிரித்தானியாவுக்குச் சென்றார் என்றொரு புனைவு ”ஆர்த்தர் மன்னன் புனைவுகளில்” (Arthurian legends) உண்டு. இப்புனைவுகள் ஐரோப்பிய நடுக்காலத்தைச் சேர்ந்தவை.
கி.பி. 19-20 நூற்றாண்டுகளில் வேறுசில புனைவுகள் எழுந்தன. அதாவது இயேசு தமது 12ஆம் வயதிற்கும் 30ஆம் வயதிற்கும் இடையே இந்தியாவுக்குப் பயணமாகச் சென்றார் என்றொரு புனைவு; அல்லது யூதேயா பாலைநிலத்தில் “எஸ்ஸேனியர்கள்” (Essenes) என்ற துறவியர் கூட்டத்தில் சேர்ந்து பயின்றார் என்று மற்றொரு புனைவு.
இன்று விவிலிய ஆய்வில் ஈடுபட்டுள்ள அறிஞர்களுள் மிகப் பெரும்பான்மையோர் மேற்கூறிய புனைவுகளுக்கு எந்தவொரு ஆதாரமும் கிடையாது என்று அப்புனைவுகளை ஒதுக்குகின்றனர். இயேசு தம் 12 வயதிலிருந்து 30 வயது வரை என்ன செய்தார் என்பது பற்றி நமக்குத் தெரியவில்லை என்பது மட்டுமே அவர்களுடைய பதிலாக உள்ளது.
இயேசு சிலுவையில் இறக்கவில்லை என்றும், அவருக்குப் பதிலாக வேறொருவரே இறந்தார் என்றும், அந்நிகழ்ச்சிக்குப் பிறகு இயேசு இன்னும் பல ஆண்டுகள் உயிர்வாழ்ந்தார் என்றும் அமைந்த புனைவுளையும் விவிலிய அறிஞர்கள் ஆதாரமற்றவை என்று தள்ளிவிடுகிறார்கள்.
இத்தகைய கதைகள் எல்லாம் வெறும் புனைவுகளே என்றும், அவற்றிற்கு யாதொரு வரலாற்று அடிப்படையும் இல்லை என்றும் அவர்கள் எண்பிக்கிறார்கள்.
இயேசுவின் 18 ஆண்டுகள் மறைந்த வாழ்வில் நடந்தது என்ன?
காணாமற்போன இயேசுவை அவருடைய பெற்றோர் எருசலேம் கோவிலில் கண்டுபிடிக்கிறார்கள். ஓவியர்: ஜேம்சு டிசோ. ஆண்டு: சுமார் 1890. காப்பிடம்: புரூக்ளின் காட்சியகம்

இயேசுவின் குழந்தைப் பருவம்குறித்து விரிவான செய்திகளைத் தருகின்ற நற்செய்தி நூல்கள், அவருக்கு 12 வயது நிரம்பியது வரையும்தாம் தகவல்கள் தருகின்றன. அதன் பிறகு அவருக்கு 30 வயது ஆகும் வரையிலான 18 ஆண்டுகள்பற்றி எந்தத் தகவலும் ஆங்கு இல்லை.
இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனதும் என்ன நடந்தது என்பதை மிகச் சுருக்கமாக லூக்கா நற்செய்தி எடுத்துக் கூறுகிறது:
“பின்பு இயேசு தம் பெற்றோர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளை யெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்” (லூக்கா 2:51-52) ”
கிறித்தவ மரபுப்படி, இயேசு தம் பெற்றோரோடு கலிலேயாவில் வாழ்ந்துவந்தார்.[14]அந்தக் காலக்கட்டத்தில் இயேசு என்ன செய்தார் என்பது பற்றி நமக்கு உறுதியாக எதுவும் சொல்ல வரலாற்று அடிப்படி இல்லை என்றுதான் விவிலிய அறிஞர் கூறுகின்றனர்.[4]
யூத சடங்குகள்
யூத சமயத்தில் சிறுவர்கள் தம் சிறுபருவத்தைத் தாண்டி, இளமைப் பருவத்தை எட்டுவது 12 வயதைத் தாண்டும்போது ஆகும். அதிலிருந்து அவர்கள் யூத சமயச் சடங்குகளை நிறைவேற்றக் கடமைப்பட்டவர்கள். இதற்கான சடங்கு “பார் மிட்ஸ்வா” (bar mitzvah) என்று அழைக்கப்படுகிறது. அதுபோலவே 30 வயது ஆகும்போது ஓர் ஆண், குருத்துவப் பணி ஆற்றும் வயதை அடைகிறார். இயேசுவின் வாழ்வில் இந்த இரு ஆண்டுகளும் (12, 30) குறிக்கப்படுவது அவருடைய குருத்துவப் பணியைக் காட்டுவதற்காக இருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்.[2]இவ்வாறு இந்த இரு எண்களும் சிறப்புப் பொருள் கொண்டனவாகலாம்.[15]
இயேசு தச்சுத் தொழில் செய்தாரா?
மாற்கு நற்செய்தியில் வரும் ஒரு சிறு பகுதி இயேசுவின் தொழில்பற்றி ஒரு குறிப்பைத் தருகிறது. இயேசு தம் சொந்த ஊரான நாசரேத்து சென்று அங்கு தொழுகைக் கூடத்தில் கற்பித்தார். அப்போது மக்கள் அவருடைய பேச்சுத் திறனைக் கண்டு வியப்புற்று,
“ என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! ”
என்று கூறினார்கள் (மாற்கு 6:2-3)[16]இயேசு தமது பணிக்காலத்தின் தொடக்கத்தில் தச்சுத்தொழில் செய்திருக்கலாம் என்றும் அத்தொழிலில் அவருக்குப் போதிய அனுபவம் இருந்திருக்க வேண்டும் என்றும் இதிலிருந்து தெரிகிறது. [16]
மேலும் மத்தேயு நற்செய்தி 13:55இல் இயேசுவின் சொந்த ஊர் மக்கள் அவருடைய ஞானத்தையும் பேச்சுத்திறனையும் கண்டு வியந்து கூறியது கீழ்வருமாறு உள்ளது:
“ அவர்கள், ‘எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? ”
என்று கேட்டார்கள்.[17][18]இதிலிருந்து, தச்சுத் தொழில் இயேசுவின் வளர்ப்புத் தந்தையான புனித யோசேப்பின் தொழிலாக இருந்தது என்றும், இயேசுவும் அத்தொழிலை நன்கு அறிந்தவரே என்றும் ஊகிக்க முடிகிறது.
இயேசுவின் மறைந்த வாழ்வுக் காலத்தில் கலிலேயாவும் யூதேயாவும்
நாசரேத்து சிறிய ஊராக இருந்தாலும் அதை அடுத்து இருந்த “செப்போரிசு” (Sepphoris) என்ற நகரத்தை மீளவும் கட்டி எழுப்பும் பணியில் பேரளவிலான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தார்கள் என்று கூறுகின்ற வரலாற்று ஏடுகள் உள்ளன. எனவே, இயேசுவின் இளமைப் பருவத்திலும் அவர் 20-30 வயதினாராக இருந்தபோதும் கட்டடங்களுக்குத் தேவையான மர வேலைகளில் ஈடுபட்டிருந்ததற்கு அடிப்படை உள்ளது என்று பேட்டி என்னும் அறிஞரும் பிற அறிஞர்களும் கூறுகின்றனர்.[19]
எஸ்ஸேனியர் குழுவினரோடு இயேசு பயின்றாரா?
1940-50களில் பாலத்தீனத்தின் சாக்கடல் அருகே சில குகைகளில் பண்டைக்கால ஏட்டுச் சுருள்களின் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன. தோல், பப்பைரசு போன்ற ஊடகங்களில் எழுதப்பட்ட அந்த ஏட்டுப் பகுதிகள் “சாக்கடல் சுருளேடுகள்” (Dead Sea Scrolls) என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஏடுகளில் சில, இயேசு வாழ்ந்த காலத்தைச் சார்ந்த எஸ்ஸேனியர்கள் என்ற யூத குழுவினரின் படைப்பாக்கமாக இருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இக்குழுவினரிடம் இயேசு ஒரு வேளை கல்வி பயின்றிருக்கக்கூடும் என்றொரு கருத்து உள்ளது. எட்மண்ட் வில்சன் என்பவர் தாம் எழுதிய ஒரு புதினத்தில் இக்கருத்தை முதன்முறையாக 1955இல் வெளியிட்டார்.[20]வேறுசில அறிஞரும் இதே கருத்தை வெளியிட்டனர்.[21]
பரிசேயர் குழுவோடு இயேசு பயின்றாரா?
இன்னும் சில ஆசிரியர்கள் இயேசு அக்கால யூதேயாவில் பெரும்பான்மையினராக வாழ்ந்த பரிசேயர் குழுவினரிடம் கல்வியறிவு பெற்றிருக்கலாம் என்று நினைக்கின்றனர். அதற்கு அவர்கள் தருகின்ற விளக்கம் என்னவென்றால், ஏறக்குறைய இயேசுவுக்கு சமகாலத்து வரலாற்றாசிரியரான பிளாவியுஸ் ஜோசேஃபஸ் என்பவர் பரிசேயர், சதுசேயர், எஸ்ஸேனியர் ஆகிய மூன்று குழுக்களைச் சார்ந்தவர்களிடமும் கல்வி பயின்றார். இயேசு பரிசேயர்களின் இயக்கத்தை நன்கு அறிந்திருந்தார். தம் பணிக்காலத்தில் பரிசேயரோடு பல முறை விவாதங்களில் ஈடுபட்டார். எனவே அவர் கல்வி பெற்ற நாள்களில் பரிசேயரைப் பற்றி அவர் பலவற்றைத் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறுவர்.[22]
இயேசுவின் மறைந்த வாழ்வை விளக்குகின்ற பிற மூலங்கள்
கிறித்தவ திருச்சபைகள் அதிகாரப்பூர்வமான நற்செய்தி நூல்களாக ஏற்பவை நான்கு மட்டுமே. அவை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்பவை ஆகும். இவை தவிர கி.பி. முதல் நூற்றாண்டுகளில் இயேசுவின் போதனை மற்றும் வாழ்க்கை பற்றி எடுத்துக் கூறுகின்ற வேறுசில நுல்களும் எழுந்தன. அவற்றைக் கிறித்தவ திருச்சபைகள் அதிகாரப்பூர்வமானவை என்று ஏற்பதில்லை. இவை “புற நூல்கள்” (apocrypha) என்று அழைக்கப்படுகின்றன. ஏற்கப்பட்ட நான்கு நற்செய்திகளிலும் இயேசு 12 வயதுமுதல் 30ஆம் வயதுவரை என்ன செய்தார் என்பது பதிவுசெய்யப்படாததால், அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் “புற நூல்கள்” பல புனைவுகளை உருவாக்கின.[23]
இளமைப் பருவத்தில் இயேசு பிரித்தானியாவுக்குச் சென்றாரா?
இயேசு தம் இளமைப் பருவத்தில் பிரித்தானியாவுக்குச் சென்றார் என்று சில புனைவுகள் எழுந்தன. அவை தரும் தகவல்கள் தமக்குள் வேறுபடுகின்றன. ஒரு கதை இயேசு பிரித்தானிய சென்றதை நற்செய்திகளில் வருகின்ற அரிமத்தியா யோசேப்பு என்பவரோடு தொடர்பு படுத்துகின்றது.இயேசு சிலுவையில் இறந்ததும் அவருடைய உடலைப் பிலாத்துவின் அனுமதியோடு ஒரு கல்லறையில் அடக்கம் செய்தவர்தான் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர். இத்தகவல் மத்தேயு 27:57-61, மாற்கு 15:42-47, லூக்கா 23:30-35, யோவான் 19:38-42 ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.
இந்த அரிமத்தியா யோசேப்பு என்பவர், இயேசு சிலுவையில் தொங்கியபோது சிந்திய இரத்தத்தை ஒரு கிண்ணத்தில் பிடித்தாராம். அந்தக் கிண்ணத்தை ஒருசிலரிடம் கொடுத்துப் பிரித்தானியாவுக்கு அனுப்பிவைத்தாராம். இவ்வாறு பிரித்தானியா சென்ற இக்கிண்ணம் 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரித்தானி யாவில் எழுந்த ஆர்த்தர் மன்னன் புனை கதைகளோடு (Arthurian cycle) தொடர்புபடுத்தப்பட்டது.
இயேசு தம் இளமைப் பருவத்தில் பிரித்தானியாவுக்குச் சென்றதாகக் கூறும் இப்புனை கதைப்படி, இயேசு மெண்டிப் பகுதியில் ப்ரிடி என்னும் இடத்தில் வாழ்ந்தாராம். அன்கு கிளாஸ்டன்பரி என்னும் இடத்தில் ஒரு குடிசை கட்டி அங்குத் தங்கியிருந்தாரம். இக்கதையை உள்ளடக்கி, வில்லியம் பிளேக் என்ற 19ஆம் நூற்றாண்டு ஆங்கிலக் கவிஞர் ஒரு கவிதை எழுதினார்.
இக்கதையின் மற்றொரு பாடம் இவ்வாறு உள்ளது: யோசேப்பு என்ற பெயருடைய ஒரு தகர வியாபாரி இருந்தாராம். இயேசுவின் வளர்ப்புத் தந்தையான புனித யோசேப்பின் மரணத்திற்குப் பிறகு அந்த யோசேப்பு என்பவர் சிறுவன் இயேசுவைத் தம் பாதுகாப்பில் வைத்திருந்தாராம். இவ்வாறு இயேசுவின் பிரித்தானியப் பயணம் புனை கதையில் உறுதி பெற்றது.
வேறு சிலர், இயேசு பிரித்தானியாவுக்குச் சென்று அங்கு, ”த்ரூயிட்” (Druids) என்ற துறவியர் குழுவிடம் கல்வி பயின்றார் என்று புனை கதைகள் எழுதினார்கள்.
சிலுவையில் அறையப்படுமுன் இயேசு இந்தியா சென்றார் என்னும் புனைவு
லூயி ஜாக்கோலியோ, 1869
லூயி ஜாக்கோலியோ என்பவர் (Jacolliot) 1869இல் இயேசுவின் வாழ்க்கை பற்றி La Bible dans l'Inde, Vie de Iezeus Christna என்றொரு நூலைப் பிரஞ்சு மொழியில் எழுதினார். அந்நூலில் அவர் இயேசு இந்தியாவுக்குச் சென்றார் என்று வெளிப்படையாகக் கூறாவிடினும், இயேசு இந்தியாவுக்குச் சென்றிருக்கக்கூடும் என்ற தம் ஊகத்தைத் தெரிவித்தார்.
ஜாக்கோலியோ இயேசுவின் வரலாற்று நிகழ்ச்சிகளையும் கிருஷ்ணரின் வரலாற்று நிகழ்ச்சிகளையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்தார். அந்த இரு வரலாறுகளிலும் வருகின்ற நிகழ்ச்சிகளுக்கிடையே மிகப் பெரும் ஒற்றுமை உள்ளதை அவர் கண்டார். அதிலிருந்து ஜாக்கோலியோ கீழ்வரும் முடிவுக்கு வந்தார்: அதாவது, கிருஷ்ணரின் வராலாறு என்பது ஒரு புனைகதை அல்ல. அக்கதையையின் அடிப்படையில் இயேசு பற்றிய கதையும் உருவானது.
மேற்கூறிய கருத்து ஏற்கத்தகாதது என்று அறிஞர் முடிவுசெய்கின்றனர். முதன்முதலில் “கிறிஸ்து” என்ற பெயர் “கிறிஸ்த்ணா” (Christna) என்ற பெயரின் திரிபு என்று ஜாக்கோலியோ கூறுவது தவறு என்றும், அவர் Krishna என்ற பெயரைத் தம் விருப்பம்போல் மாற்றியுள்ளார் என்றும் தெரிகிறது. மேலும் அவர், “கிறிஸ்த்ணாவை” அவருடைய சீடர்கள் “இயேசேயுஸ்” (Jezeus) என்று அழைத்ததாகவும் அதற்கு “தூய்மையே உருவானவர்” என்று பொருள் என்றும் கூறுகிறார்.இதை மறுத்து, மாக்ஸ் முல்லர் என்னும் சமசுக்கிருத அறிஞர் “இயேசேயுஸ்” என்ற சொல் சமசுக்கிருத மொழியிலேயே இல்லை என்றும், அச்சொல்லை ஜாக்கோலியோ தம் சொந்த விருப்பப்படி உருவாக்கிக்கொண்டார் என்றும் நிரூபித்துள்ளார். மேலும், கிருஷ்ணர் வாழ்ந்ததாகக் கூறப்படும் காலமும், இயேசுவின் காலமும் ஒன்றன்று.
நிக்கோலாசு நோட்டோவிச், 1887
நிக்கோலாசு நோட்டோவிச் (Nicolas Notovich) என்பவர் உருசிய நாட்டவர். 1887இல் அவர் போர்ச் செய்திகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்பும் பணியைச் செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் ஜம்மு-காஷ்மீரில் உள்ள லடாக் பகுதில் அமைந்துள்ள ஹேமிஸ் (Hemis Monastery) என்ற திபெத்திய-புத்த மடத்தில் “மனிதருள் மாமனிதர்:புனித இஸ்ஸாவின் வரலாறு” (Life of Saint Issa, Best of the Sons of Men) என்ற பழைய ஏடு ஒன்றினைக் கண்டுபிடித்ததாகவும் அதில் இயேசுவின் வாழ்க்கை பற்றி அரிய செய்திகள் அடங்கியிருந்ததாகவும் உலகுக்கு அறிவித்தார். “ஈசா” என்பது அரபி மொழியில் இயேசுவைக் குறிக்கும் சொல்.
நோட்டோவிச் தாம் லடாக் பகுதியின் திபெத்திய-புத்த மடத்தில் கண்டுபிடித்ததாகக் கூறிய பழைய ஏட்டின் மொழிபெயர்ப்பு என்று கூறி பிரஞ்சு மொழியில் La vie inconnue de Jesus Christ (ஆங்கிலம்: Unknown Life of Jesus Christ) என்ற நூலை 1894இல் வெளியிட்டு, அதில் அவர் அந்த ஏட்டை எவ்வாறு கண்டிபிடித்தார் என்பதையும் ”உண்மையான வரலாற்று நிகழ்ச்சியாக” எடுத்துரைத்தார்.
நோட்டோவிச் வெளியிட்ட நூலும் அதில் அவர் தாமாகவே திபெத்திய-புத்த மடத்தில் கண்டுடித்ததாகக் கூறிய “பழைய ஏடு” பற்றிய செய்தியும் பெரிய சர்ச்சையைக் கிளப்பிவிட்டது. அந்நூலை வாசித்த இந்தியவியல் அறிஞரான மாக்ஸ் முல்லர் உடனடியாக அதற்கு மறுப்புத் தெரிவித்தார். அதாவது, முல்லர் கருத்துப்படி, ஒன்றில் லடாக் புத்த மடத்துத் துறவிகள் நோட்டோவிச்சை ஏமாற்றியிருக்க வேண்டும் அல்லது நோட்டோவிச் தாமே இயேசு பற்றி ஒரு கதை புனைந்திருக்க வேண்டும்[33][34]
நோட்டோவிச் நுலின் சுருக்கம் இது: இயேசுவின் வரலாறு இசுரயேல் மக்கள் எகிப்துக்குச் சென்றதிலிருந்து தொடங்குகிறது. அவர்களை மோசே எகிப்திய அடிமைத் தளையினின்று விடுவித்தார். பின்னர் உரோமையர் அவர்கள்மேல் வெற்றிகொண்டு அவர்களுடைய நிலத்தை ஆக்கிரமித்தார்கள். அக்காலக் கட்டத்தில் இயேசு பிறந்தார். 12 வயதுவரை தம் பெற்றோரோடு வாழ்ந்த இயேசு, 13 வயதில் ஒரு வர்த்தகக் குழுவினரோடு சேர்ந்து கவுதம புத்தரின் போதனைகளை அறிந்துகொள்ளும் பொருட்டு இந்தியாவின் சிந்து பகுதிக்கு வந்தார். முதலில் அவர் சமணத் துறவிகளைச் சந்தித்தார். அக்காலகட்டத்தில் இந்தியாவில் இருந்த மகத பேரரசின் நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயின்றார் என்றின்றனர். ஏனெனில் அக்காலகட்டத்தில் உலகின் பல பகுதியில் இருந்து இந்தியாவிற்கு வந்து பயிற்றனர். இந்தியா ஒரு பெரிய ஆன்மிக மற்றும் அறிவி சார்ந்த கல்வியை தந்திருந்தது. மேலும் இந்த நாளந்தா பல்கலைக்கழகம் தான் உலகின் முதல் மற்றும் மிகப் பெரிய கல்வி மையமாக செயல்பட்டது. மேலும் பிற்காலத்தில் இங்கு சமண கல்வி சேர்ந்தே பயிற்று வித்தனர் புத்தரின் பல கொள்கைகளை அடிப்படையாக வைத்தே கிறிஸ்து தன் போதனைகளை செய்திருக்கின்றார் என்பதற்கு பல சான்றுகள் உண்டு. இயேசு இங்கு பாளி மொழி கற்று, பவுத்த துறவிகளோடு 6 ஆண்டுகள் பயின்றார். தொடர்ந்து 6 ஆண்டுகள் இயேசு இந்தியாவின் பல புண்ணியத் தலங்களைச் சந்தித்து அங்கு பயிற்றுவித்தார். தமது 29ஆம் வயதில் அவர் தம் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்று அங்கு போதிக்கலானார். பின்னர் அவர் எருசலேம் நகருக்குச் சென்றார். ஆனால் உரோமை ஆளுநராக இருந்த பொந்தியு பிலாத்து, மற்றும் யூத மதத்தலைவர்கள் இயேசுவைக் கலகக்காரராகப் பார்த்தார்கள். அவர் தம்மைக் “கடவுளின் மகன்” என்று கூறியதாகக் காட்டி, அவர் இறைநிந்தை செய்ததாகக் குற்றம் சாட்டி, அவரைக் கைதுசெய்து அவரைக் கொன்றுபோட்டார்கள். அவரைப் பின்பற்றியவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். அவருடைய சீடர்கள் அவருடைய போதனைகளை எல்லா இடங்களுக்கும் சென்று பரப்பினார்கள்.
நோட்டோவிச், இயேசு பற்றிய மேற்கூறிய செய்திகளை லடாக் பகுதி புத்த மடத்தில் கண்டுபிடித்த ஏட்டிலிருந்தும் புத்த துறவிகளிடமிருந்தும் பெற்றதாகக் கூறியது உண்மைதானா என்று அறிய பல ஆய்வாளர்கள் முனைந்தனர். அவர்களுள் ஒருவர் மாக்ஸ் முல்லர். அவர் லடாக்கின் ஹேமிஸ் புத்த மடத்தின் தலைவருக்குக் கடிதம் எழுதி, நோட்டோவிச் பற்றியும் அவர் கண்டெடுத்ததாகக் கூறிய ஏடுபற்றியும் விசாரித்தார். அதற்கு மடத் தலைவர், தாம் பொறுப்பேற்று பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன என்றும், அக்காலக் கட்டத்தில் வெளிநாட்டைச் சார்ந்த எவரும் தங்கள் மடத்திற்கு வந்ததில்லை என்றும், நோட்டோவிச் குறிப்பிட்ட “இயேசு பற்றிய பழைய ஏடு” தம் மடத்தில் கிடையாது என்றும் பதில் எழுதினார்.
ஆர்ச்சிபால்டு டக்ளஸ் (J. Archibald Douglas) என்ற மற்றொரு ஆய்வாளரும் ஹேமிஸ் இதுபற்றிய ஆய்வில் இறங்கினார். அவர். நேரடியா அந்த மடத்திற்கே சென்று தலைமைத் துறவியைச் சந்தித்து உரையாடியானார். அப்போதும் அத்துறவி மாக்ஸ் முல்லருக்குக் கடிதத்தில் எழுதியதையே டக்ளசிடமும் எடுத்துக் கூறினார். அதாவது நோட்டோவிச் ஒருபோதும் லடாக் புத்தமடத்திற்குச் சென்றதில்லை.
நோட்டோவிச் சொன்ன அனைத்துமே கட்டுக்கதை என்பது தெளிவாயிற்று. இந்தியவியல் அறிஞர் லியோப்போல்டு ஃபோன் ஷ்ரேடர் (Leopold von Schroeder) என்பவர் நோட்டோவிச் கூறியது “மாபெரும் புளுகு” (big fat lie) என்று வர்ணித்தார். வில்கெல்ம் ஷ்னேமெல்கெர் (Wilhelm Schneemelcher என்பவரும் அவ்வாறே கூறியுள்ளார்.
நோட்டோவிச் வேண்டுமெனறே கதை எடுத்துக்கட்டி, தம் நூலில் உண்மைபோல் வெளியிட்டதை அறிஞர்கள் வெளிச்சமிட்டுக் காட்டிய பிறகும், அவர் முதலில் தாம் சொன்னது உண்மையே என்று கூறினார்.
ஆனால் வரலாற்றாளர்கள் நோட்டோவிச்சின் கதை கட்டுக்கதையே என்று காட்டிய சிறிது காலத்துக்குப் பின்பு நோட்டோவிச் தம் நூலுக்கான ஆதாரங்கள் போலி என்று ஒத்துக்கொண்டார்.
“லடாக் புத்த மடத்தில் இயேசு பற்றிய ஆவணத்தை நோட்டோவிச் கண்டெடுத்தார் என்பது முற்றிலும் பொய் என்றும், அத்தகைய ஆவணம் ஒன்று அங்கு கிடையாது என்றும் எல்லா அறிஞர்களும் ஒத்துக்கொள்கின்றனர். தமது போலிக் கதையை வெளியிட்டு அவர் பெரும் செல்வம் சேர்த்தார். பிரபலியமும் அடைந்தார்” என்று பார்ட் ஏர்மான் (Bart D. Ehrman) என்ற அறிஞர் கூறுகிறார்.
லேவி எச். டவுலிங், 1908
இவர் 1908இல் “இயேசு கிறித்து பற்றிய கும்ப கால நற்செய்தி” (Aquarian Gospel of Jesus the Christ என்றொரு நூலை வெளியிட்டார். அந்நூலில் டவுலிங்குக்கு வானவெளியிலிருந்து வழங்கப்பட்ட ஏடுகளில் இயேசு பற்றி எழுதப்பட்டிருந்தவை அடங்கியிருந்தன என்று அவர் கூறினார். குறிப்பாக, இயேசு தம் 12 வயதிலிருந்து 30 வயது வரை எந்தெந்த இடங்களுக்குப் பயணம் செய்து, கல்வி பயின்று, போதித்தார் என்பது தமக்கு வெளிப்படுத்தப் பட்டதாக அவர் கூறினார். மேலும் இயேசு தம் இளமைப் பருவத்தில் இந்தியா, திபெத்து, பெர்சியா, அசீரியா, கிரீசு, எகிப்து ஆகிய பிரதேசங்களுக்குச் சென்று அங்கு கல்வியறிவு பெற்றார் என்றும் அங்கிருந்த மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார் என்றும் டவுலிங் தம் நூலில் கூறுகிறார்.
டவுலிங் எழுதிய நூலில் உள்ள சில கருத்துகளை எடுத்து, அவற்றை அகமதியா கருத்துகளோடும் பிற சமய இயக்கங்களின் கருத்துகளோடும் இணைத்து ஹோல்கர் கெர்ஸ்டென் (Holger Kersten) என்பவர் இயேசு பற்றிப் புதியதொரு பார்வையை முன்வைத்தார்.
மேற்கூறிய எதனையும் விவிலிய அறிஞர்கள் ஏற்கவில்லை
இயேசு தம் இளமைப் பருவத்தில் இந்தியா, திபெத்து போன்ற தூர இடங்களுக்குச் சென்று கல்வி பயின்றார் என்றும் அங்கு போதித்தார் என்றும் கூறுவதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடையாது என்று விவிலிய அறிஞர்கள் கூறுகிறார்கள். எனவே, விவிலிய அறிஞர்கள், மேலே கூறிய ஜாக்கோலியோ, நோட்டோவிச், டவுலிங் போன்றோர் இயேசு இந்தியாவுக்குச் சென்றார் அல்லது வேறு நாடுகளுக்குப் போனார் என்று கூறுவது வெறும் கற்பனையே என்ற முடிவுக்கு வருகின்றனர். இதற்கு எடுத்துகாட்டாக, கீழ்வரும் ஆசிரியர்களைக் குறிப்பிடலாம்: இராபர்ட் ஃபான் ஃபூர்ஸ்ட், மாற்கஸ் போர்க்[9]ஜான் டோமினிக் க்ரோசான் [, லெஸ்லி ஹூல்டென். [40], பவுலா ஃப்ரெட்ரிக்சென்.
சிலுவையில் உயிர்துறக்காமல் இயேசு செலவிட்ட ஆண்டுகள்பற்றிய புனைவுகள்
சில நூலாசிரியர்கள் இயேசுவின் வரலாற்றைக் கூறும்போது, இயேசு சிலுவையில் அறையப்பட்டது, உயிர்துறந்தது போன்ற பொருள்கள் பற்றியும், அவர் சிலுவையில் உயிர்துறக்கவில்லை என்றால் பின்னர் வேறு எங்காவது சென்றாரா என்பது பற்றியும் பல புனைகதைகளை உருவாக்கியுள்ளனர்.
சிலர் இயேசு உண்மையிலேயே சிலுவையில் அறையப்படவில்லை என்கின்றனர். வேறு சிலர் அவர் சிலுவையில் அறையப்பட்டாலும் உயிர் துறக்கவில்லை என்கின்றனர். அதன் பிறகு அவர் இயற்கை மரணம் எய்துமுன் அவர் காஷ்மீர் சென்றார் என்றொரு கருத்தும், உரோமை சென்றார் என்றொரு கருத்தும், யூதேயாவின் மசாதா முற்றுகையின்போது அங்கு சென்றார் என்றொரு கருத்தும் வெளியிடப்பட்டுள்ளன.
திருக்குரான் கருத்து
குரான் 4:157-158 பகுதியின் அடிப்படையில் பெரும்பான்மையான முசுலிம்கள் இயேசு உண்மையிலேயே சிலுவையில் அறையப்படவில்லை என்கின்றனர். வேறொருவரை கடவுள் இயேசுபோல் தோற்றமளிக்கச் செய்தார் என்றும், அந்த மனிதரையே சிலுவையில் அறைந்தார்கள் என்பதும் அவர்கள் கருத்து. அவ்வாறு உண்மையிலேயே சிலுவையில் அறையப்பட்டவர் யூதாசாகவோ சிரேன் ஊர் சீமோனாகவோ இருந்திருக்கலாம். மேலும், இயேசு கடவுளின் வல்லமையால் நேரடியாக விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்றும், அவர் மீண்டும் வருவாரென்றும் முசுலிம்கள் நம்புகின்றனர்.[42]
மிர்சா குலாம் அகமத், 1899
இசுலாம் சமயத்தின் பிரிவான அகமதியா இயக்கத்தைத் தோற்றுவித்தவர் மிர்சா குலாம் அஹ்மத். முசுலிம்கள் பொதுவாகத் திருக்குரானின் பகுதிகள் என்று ஏற்பனவற்றிற்கும் மேலதிகமான சில பகுதிகளையும் அகமதியா இயக்கத்தினர் திருக்குரானாகவே கருதுகின்றனர். அதன்படி, இயேசு காஷ்மீர் சென்றார் என்றும், அங்கு நூற்று இருபது வயதில் இறந்தார் என்றும் உளதாம். காஷ்மீரில் இயேசுவின் கல்லறை உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 1747இல் இசுலாம் சமயத்து சுபி புலவர்களுள் ஒருவரான குவாஜா முகம்மது ஆசாம் திதமாரி என்பவர் ”காஷ்மீரின் வரலாறு” என்றொரு நூல் எழுதினார். அதில் அவர், “வெளிநாட்டைச் சேர்ந்த ஓர் இறைவாக்கினர்” “யூஸ் ஆசாஃப்” என்னும் பெயர் குறிப்பிட்ட கல்லறையில் காஷ்மீரின் சிறிநகரில் உள்ள ரோசா பால் என்னும் திருத்தலத்தில் கல்லறையில் வைக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார். அக்கல்லறை இயேசுவின் கல்லறைதான் என்றொரு புனைவு வரலாறு எழுந்தது. அதாவது, “யூஸ் ஆசாஃப்” என்பது “இயேசு”தான் என்ற கருத்து எழுந்தது. ஆனால் இக்கருத்துக்கு வரலாற்று அடிப்படை இல்லை என்றும், இது ஒரு கட்டுக்கதை என்றும் பவுல் பாப்பாஸ் என்னும் அறிஞர் எழுதுகிறார்.[44]
மேகர் பாபா (1894-1969)
இந்திய ஆன்மிகவாதியான மேகர் பாபா (Meher Baba) என்பவரும் இயேசுவின் இறுதி நாட்கள்பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ளார். அவருடைய கருத்துப்படி, இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது உண்மையிலேயே இறக்கவில்லையாம். மாறாக, நிர்விகல்ப சமாதி நிலையை அடைந்தாராம். அதாவது சாதாரண நினைவு நிலையைக் கடந்து கடவுளோடு ஐக்கியமானாராம். மூன்று நாள்களுக்குப் பின் மீண்டும் நினைவு நிலைக்குத் திரும்பினாராம். பிறகு இயேசு தம் சீடர்களான பர்த்தலமேயு, யூதா போன்ற சிலரோடு தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் இரகசியமாகக் கிழக்கு நோக்கிப் புறப்பட்டாரம். இதுவே “இயேசுவின் உயிர்த்தெழுதல்” என்று அழைக்கப்படுகிறது என்று மேகர் பாபா கூறுகிறார். மேலும் அவர் கூற்றுப்படி, இயேசு இரகசியமாக இந்தியா வந்தபின் மேலும் கிழக்கு நோக்கிச் சென்று பர்மாவின் ரங்கூன் சென்று அங்கு சிறிதுகாலம் தங்கியிருந்தார். பின் வடக்காகச் சென்று காஷ்மீர் போய் அங்கே நிலையாகத் தங்கினார் இயேசு என்று மேகர் பாபா கூறுகிறார். இயேசு தம் ஆன்மிகப் பணி முடிவடைந்ததும் தம் உடலை விட்டுச் சென்றாராம். பன்னிரு திருத்தூதர்களும் இயேசுவின் உடலைக் காஷ்மீரின் கான் யார் மாவட்டத்தில் ஹார்வான் என்ற இடத்தில் அடக்கம் செய்தார்களாம். இயேசு பற்றி மேகர் பாபா புனைந்த இக்கதையை சுவாமி அபேனாந்தா, சங்கராச்சாரியார், சத்ய சாயி பாபா போன்றோரும் வேறு சிலரும் ஏற்கின்றனர்.
ஹோல்கர் கெர்ஸ்ட்டன், 1981
1981ஆம் ஆண்டு ஹோல்கெர் கெர்ஸ்டன் என்னும் செருமானிய எழுத்தாளர் “இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்” என்ற நூலில் தம் கருத்தைத் தெரிவித்தார். அவருடைய கருத்து புதிதன்று. மாறாக, ஏற்கெனவே நோட்டோவிச், மேகர் பாபா போன்றவர்கள் கூறியவற்றைச் சற்றே விரித்து அவர் இயேசுவின் மறைந்த வாழ்வைக் கதையாகப் புனைந்துள்ளார். அதைக் குந்தெர் க்ரேன்போல்ட் என்பவர் தமது “இந்தியாவில் இயேசு என்னும் கட்டுக்கதைக்கு முற்றுப்புள்ளி” (Jesus in Indien. Das Ende einer Legende (Munich, 1985)) என்னும் நூலில் ஆதாரங்களுடன் மறுத்துள்ளார். வில்ஹெல்ம் ஷ்னேமெல்கெர் என்பவரும் மறுப்பு அளித்துள்ளார்.[11]இக்கதைக்கு அடித்தளம் இல்லை என்பதே அறிஞர் கருத்து. ஜெரால்டு ஒகாலின்சு (Gerald O'Collins) என்னும் அறிஞர் கூற்றுப்படி, கெர்ஸ்டன் புனைந்த கதை ஒரு ஏமாற்று வித்தை.
வேறுசில…
இயேசு பற்றி மேலே விளக்கப்பட்ட புனைவுகள் தவிர வேறுசில கதைகளும் உருவாக்கப் பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, பார்பரா தீரிங் (Barbara Thiering) என்பவர் தாம் 1992இல் எழுதிய Jesus the Man என்ற நூலில் கீழ்வரும் புனைவைத் தருகிறார்: அதாவது, சிலுவையில் இயேசுவும் யூதாசு இஸ்காரியோத்தும் அறையப்பட்டனராம். யூதாஸ் இறந்துபோக, இயேசு சிலுவையில் உயிர்நீக்கவில்லை. பின் அவர் மகதலா மரியாவை மணந்து கொண்டாராம். மத்தியதரைக் கடல் பகுதிகளில் பயணம் செய்தாராம் உரோமையில் இறந்தாராம்.
1995இல் கென்னத் ஹோஸ்கிங் என்பவரும் இயேசு சிலுவையில் அறையப்பட்டாலும் உயிர் துறக்கவில்லை என்று கூறுகிறார். சாக்கடல் சுவடிகள் குறிக்கின்ற “நீதி ஆசிரியர்” என்பவர் இயேசுவே என்கிறார் அவர். அவர் கருத்துப்படி, இயேசு உரோமையருக்கு எதிராக நிகழ்ந்த போரில் (கி.பி. 73-73) யூதர்களின் படைக்குத் தலைமை தாங்கிப் போரிட்டு இறந்தாராம்.
”விவிலிய மர்மங்கள்” (Mysteries of the Bible) என்ற தலைப்பில் 1996இல் உருவாக்கப்பட்ட செய்திப் படத்தில் இயேசு இந்தியா சென்றார் என்ற கருத்தைப் பற்றிய நேர்காணலில் பல அறிஞர்கள் பங்கேற்றனர்.
எட்வர்டு டி. மார்ட்டின் என்பவர் 2008இல் King of Travelers: Jesus' Lost Years in India என்றொரு நூல் எழுதினார். அது Jesus in India என்ற பெயரில் 2008 இல் திரைப்படமாக்கப்பட்டது.
இயேசு பற்றிய மற்றொரு புனைவு Lamb: The Gospel According to Biff, Christ's Childhood Pal என்ற தலைப்பில் கிறிஸ்தோபர் மூர் என்பவரால் வெளியிடப்பட்டது. அப்புதினத்தில் ஆசிரியர், இயேசுவுக்கு மிக நெருக்கமான சிறுவயது நண்பராக பிஃப் (Biff) இருந்ததாகவும், அந்த நண்பரே இயேசுவின் கதையை எடுத்துக்கூறுவதாகவும் கற்பனை செய்துள்ளார். இயேசு இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்குச் சென்றதாக பிஃப் என்னும் நண்பர் கூறுவதாக நூலாசிரியர் கூறியுள்ளார்.
ஆக. இயேசுவும் கிருஸ்த்துவ மதமும் மர்மங்கள் நிறைந்த ஒன்றாகவே இன்றுவரை இவ்வுலகில் வாழ்ந்து வருகின்றன. இயேசுவின் வாழ்க்கை வரலாறு முழுமையாக வெளிப்பட்டால் ஒழிய இந்த மர்மங்கள் முடிச்சி அவிழ்க்கப்படாமலேயே இருக்கும்.